Home /News /technology /

இந்தியாவில் 4 புதிய மாடல்களில் வெளியாகவுள்ள ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் 4 புதிய மாடல்களில் வெளியாகவுள்ள ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

 ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருந்தன. ஆனால், உலக அளவில் ஏற்பட்ட சிப்களின் தட்டுப்பாட்டால் ரியல்மி மொபைல்களின் புது மாடல்கள் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளன என்று ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கென்றே வாராவாரம் சிறப்பான தள்ளுபடிகளுடன் பல வகையான மொபைல்கள் வெளியாகுகின்றன. சிறப்பான கேமிரா வசதி, தரமான செயல்திறன், அட்டகாசமான கேமிங் வசதி, அதிக ஸ்டோரேஜ் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்பி வாங்குவோம். அந்த வகையில் இந்த பிப்ரவரியில் சில புது வகையான ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன.

    அதில் ஒன்று தான் ரியல்மீ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன். இந்த தகவல் நிச்சயம் ரியல்மீ மொபைல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தரும். அடுத்த வருட பிப்ரவரியில் இந்த ரியல்மீ 9 சீரிஸ் மொபைலில் 4 புதிய மாடங்கள் வெளியாக உள்ளன. இதற்கு ரியல்மீ 9i, ரியல்மீ 9, ரியல்மீ 9 ப்ரோ, and ரியல்மீ 9 ப்ரோ+/மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே இடைநிலை பட்ஜெட்க்குள் உள்ளோருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

    இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருந்தன. ஆனால், உலக அளவில் ஏற்பட்ட சிப்களின் தட்டுப்பாட்டால் ரியல்மி மொபைல்களின் புது மாடல்கள் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளன என்று ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ALSO READ |  இருட்டில் பிரகாசிக்கும் OnePlus Nord 2 x PAC-MAN எடிஷன்- தற்போது விற்பனையில்

    இந்த ரியல்மீ 9 சீரிஸ் மொபைல்களில் பன்ச் ஹோல் கட் அவுட் வசதி, மெல்லிய மொபைல் தோற்றம், மிக பாதுகாப்பான முறையில் வரவுள்ள இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் இதில் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதன் டிஸ்பிளேயானது 6.5 இன்ச் அளவு கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதில் AMOLED டிஸ்பிளே முழு-HD+ ரிசோலியூஷன் (1080x2400 பிக்ஸல்ஸ்) வசதியுடன் வரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வகை ஸ்மார்ட்போன்களில் குவாட் கேமிரா செட் அப் வசதி தரப்படலாம். இதில் 64MP பிரைமரி கேமிரா, 8MP அல்ட்ரா ஒயிடு சென்சார், 5MP மைக்ரோ லென்ஸ், மற்றும் 2MP டெப்த் கேமிரா ஆகிய வசதிகளை கொண்டிருக்கலாம். மேலும் 32MP செல்பி கேமிரா தரப்படலாம். சிறப்பான செயல்திறன் அனுபவத்தை தனது யூசர்களுக்கு வழங்க அட்டகாசமான சிப்செட்களை அவ்வப்போது ரியல்மீ நிறுவனம் தந்து வருகிறது.

    ALSO READ |  மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸின் உற்பத்தியை நிறுத்தும் சாம்சங்! காரணம் என்ன?

    அந்த வகையில் இந்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் வசதி வரவுள்ளது. மேலும் இதில் 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனானது ஆண்ட்ராய்டு 11 சாஃப்ட்வேரில் இயங்கவுள்ளது. இதில் 5,000 mAh பேட்டரி செட் அப் மற்றும் விரைவான சார்ஜிங் வசதியும் வரவுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Smart Phone

    அடுத்த செய்தி