64 மெகா பிக்சல் கேமிராவுடன் ரியல்மி... வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...!

சாம்சங் கேலக்ஸி A70S ஸ்மார்ட்ஃபோன்தான் இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் திறன் கொண்டு வெளியாகும் ஃபோன் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

64 மெகா பிக்சல் கேமிராவுடன் ரியல்மி... வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 10, 2019, 8:01 AM IST
  • Share this:
சீன நிறுவனமான ரியல்மி தனது முதல் 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை முதலாவதாக இந்தியாவிலேயே அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் வெளியிட்டுள்ளார். வருகிற தீபாவளி அன்று பண்டிகைகால வெளியீடாக இந்த 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ரியல்மி ஸ்மார்ட்ஃபோன் வெளியாக உள்ளது.

ரியல்மி தலைவர் சேத் தங்களது போட்டி நிறுவனமான ஜியோமியின் 108 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மாட்ர்ஃபோன் குறித்து கூறுகையில், “ஒரு சாதனைப் ஃபோனை பிபிடி மூலமாக திரையில் காண்பிப்பதற்கும் விற்பனைக்குக் கொண்டு வந்து காண்பிப்பதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன” என்றுள்ளார்.


உலகின் இதர நாடுகளுக்கு அல்லாமல் இந்தியாவில் இந்தப் புதிய தொழில்நுட்பத்துடனான ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்வதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது. 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை 2019-ன் இறுதியில் வெளியிடப்போவதாக ஜியோமி நிறுவனம் சமீபத்தில்தான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாம்சங் கேலக்ஸி A70S ஸ்மார்ட்ஃபோன்தான் இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் திறன் கொண்டு வெளியாகும் ஃபோன் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: 64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!
First published: August 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்