வாரம் ஒருநாள் மட்டுமே இனி ரியல்மி 5 விற்பனை இருக்கும்..! கால அட்டவணை வெளியீடு

12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் உள்ளது.

வாரம் ஒருநாள் மட்டுமே இனி ரியல்மி 5 விற்பனை இருக்கும்..! கால அட்டவணை வெளியீடு
ரியல்மி 5
  • News18
  • Last Updated: September 10, 2019, 5:15 PM IST
  • Share this:
ரியல்மி 5 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று நண்பகல் 12 மணி அளவில் தொடங்கியுள்ளது. ரியல்மி ஆன்லைன் தளத்தில் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை தொடங்கியுள்ளது.

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்ட ’ஃப்ளாஷ் சேல்’ விற்பனையின்போது சுமார் 1,20,000 போன்கள் விற்பனை ஆகின. அதிகப்படியான வரவேற்பால் மிகவும் விரைவாகவே மீண்டும் ஃப்ளாஷ் விற்பனைக்கு வந்துள்ளது ரியல்மி 5.

3ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் 9,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் 10,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 11,999 ரூபாயும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ மற்றும் பர்ப்பிள் ஆகிய இரு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.


12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் உள்ளது. ரியல்மி தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் மொபிக்விக் மூலம் பணம் செலுத்தினால் 750 ரூபாய் வரையில் சூப்பர்கேஷ் ஆஃபர் வழங்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் HDFC மற்றும் ஆக்சிஸ் வங்கியில் க்ரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 5 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி இனி ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு ரியல்மி 5 விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!குழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி?
First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்