வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..!

ரியல்மி 5 ஃபோனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 16, 2019, 3:31 PM IST
வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..!
ரியல்மி
Web Desk | news18
Updated: August 16, 2019, 3:31 PM IST
அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களின் சிறப்பம்ச விவரங்களையும் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ-வின் சிறப்பம்சங்கள் மைக்ரோசைட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்ஃபோன்களும் ஸ்போர்ட் க்வாட் ரியர் கேமிராக்களைக் கொண்டுள்ளன. இந்த அறிவிப்பை ரியல்மி இந்தியா சிஇஓ மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

 
Loading...ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் ரியல்மி 5 ப்ரோ, IMX586 ப்ரைமரி சென்சார் உடன் 48 மெகாபிக்சல் கொண்ட கேமிராவாக உள்ளது. மேலும் இந்த ஃபோன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் 55 % சார்ஜ் ஏறும் திறன் கொண்டுள்ளது.

ரியல்மி 3i போன்றே டைமண்ட் கட் ஃபினிஷ் உடனே ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரியல்மி 5 ஃபோனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி இவ்விரு ஃபோன்களும் விற்பனைக்கு அறிமுகமாகின்றன.

மேலும் பார்க்க: அட்டகாசமான ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனையில் Vivo S1!

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...