இனி ஸ்டோர்களிலும் ரியல்மி 5... ஆன்லைனில் செவ்வாய்க்கிழமை தோறும் வாங்கலாம்!

12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் உள்ளது.

Web Desk | news18
Updated: September 12, 2019, 10:35 PM IST
இனி ஸ்டோர்களிலும் ரியல்மி 5... ஆன்லைனில் செவ்வாய்க்கிழமை தோறும் வாங்கலாம்!
ரியல்மி 5
Web Desk | news18
Updated: September 12, 2019, 10:35 PM IST
ரியல்மி மற்றும் இதர ஸ்டோர்களில் இனி ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்ட ’ஃப்ளாஷ் சேல்’ விற்பனையின்போது சுமார் 1,20,000 போன்கள் விற்பனை ஆகின.

3ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் 9,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் 10,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 11,999 ரூபாயும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ மற்றும் பர்ப்பிள் ஆகிய இரு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் உள்ளது.


ஆன்லைன் மூலமாக ரியல்மி 5 ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு ரியல்மி தளம், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, ரியல்மி 5 போனை இன்று முதல் ஸ்டோர் விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளது.

மேலும் பார்க்க: புதிய அப்டேட்டுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி A50s மற்றும் கேலக்ஸி A30s!

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

Loading...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...