• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவில் ரூ.3,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்!

இந்தியாவில் ரூ.3,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்!

ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்

ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்

ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர் 20W டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டுள்ளது.

  • Share this:
சிறந்த ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி-க்களை வெளியிட்டு இந்திய மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ரியல்மி நிறுவனம் சமீபத்தில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பொருட்களின் வரிசையில் ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக், க்ளோசர் க்ரீன் கலர் ஆப்ஷனில் ரியல்மி பட்ஸ் ஏர் 2, ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர், ரியல்மி கூலிங் பேக் கிளிப் நியோ, ரியல்மி டைப்-சி சூப்பர் டார்ட் கேம் கேபிள் மற்றும் ரியல்மி மொபைல் கேம் ட்ரிகர் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த தயாரிப்புகள் அனைத்தும் Realme GT Neo 2 ஸ்மார்ட் ஃபோனின் இந்திய மாடலுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக் HDR10+உடன் 60fps-ல் 4K ஸ்ட்ரீமிங்கை சப்போர்ட் செய்கிறது.

ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர் 20W டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டுள்ளது. தற்போது ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்கின் விலை, கிடைக்கும் தன்மை, ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம். ரியல்மியின் புதிய தயாரிப்பான 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக் (Realme 4K Google TV Stick) இந்தியாவில் கூகுள் டிவியை இயக்கும் முதல் ஸ்மார்ட் டிவி டாங்கிள் ஆகும்.

Also read... புதிய போன் வாங்கப் போகிறீர்களா? உங்களுக்கான டாப் 5 கேமரா ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியல்!

Realme 4K Google TV Stick-ன் விலை:

இந்த ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக்கின் விலை ரூ.3,999 ஆகும். ஆனால் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்க உள்ள ரியல்மி ஃபெஸ்ட்டிவ் டேஸ் (Realme Festive Days) விற்பனையின் போது ரூ.2,999 என்ற சலுகை விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய டிவி ஸ்டிக்கை ரியல்மியின் அதிகாரப்பூர்வ வெப்சைட், பிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகள் வழியே வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம்.

Realme 4K Google TV Stick-ன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

ரியல்மியின் இந்த புதிய டிவி ஸ்டிக், கூகுளின் புதிய டிவி பிளாட்ஃபார்மான கூகுள் டிவியில் இயங்குகிறது. இந்த ஸ்டிக் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் க்ரோம்கேஸ்ட் இன்டக்ரேஷனுடன் வருகிறது. இந்த டிவி ஸ்டிக் 2GB ரேம் மற்றும் 8GB ஆன்போர்ட் ஸ்டோரேஜுடன் இணைந்த quad-core ARM Cortex-A35 CPU-வை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்த வரை வைஃபை, ப்ளூடூத் v5 மற்றும் HDMI 2.1 போர்ட் ஆகியவை அடங்கும். நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், யூடியூப் மியூசிக், அமேசான் பிரைம் வீடியோ, சோனி வூட், கூகுள் ப்ளே கேம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் போன்றவற்றின் உள்ளடக்கத்தையும் ரியல்மி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்டிக் கொண்டு இருக்கிறது. இந்த டிவைசில் ரியல்மி கஸ்டமைஸ்டு ரிமோட்டை பயன்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்டிக் ப்ளூடூத் ரிமோட்டுடன் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: