₹10,000-க்கு வெளியாகிறது #RealMe3 !

10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்ஃபோனின் திறனை 10-30 சதவிகிதம் வரையில் அதிகரித்திருப்பதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: February 23, 2019, 3:02 PM IST
₹10,000-க்கு வெளியாகிறது #RealMe3 !
ரியல்மி
Web Desk | news18
Updated: February 23, 2019, 3:02 PM IST
வருகிற மார்ச் 3-ம் தேதி இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட்ஃபோனை அந்நிறுவனம் வெளியிடுகிறது.

மார்ச் 3-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ரியல்மி இந்தியாவில் ரியல்மி 3 ஸ்மார்ட்ஃபோனை வெளியிடுகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வத் தகவலை ரியல்மி இந்தியா சிஇஓ மாதவ் ஷேத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரியல்மி U1 அடிப்படையிலேயே ரியல்மி 3-யும் இயங்கும் எனக் கூறப்படுகிறது.

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனை விட ரியல்மி 3-ல் டவுன்லோடு வேகம் 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. MediaTek Helio P70 SoC திறன் உடன் வெளியாகும் முதல் ரியல்மி ஸ்மார்ட்ஃபோனாக ரியல்மி 3 உள்ளது. ரியல்மி U சீரிஸ் ரகங்களில் செல்ஃபி எடுப்பதற்கான புதிய தொழில்நுட்பம் ரியல்மி 3-ல் இடம்பெற்றுள்ளது.


10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்ஃபோனின் திறனை 10-30 சதவிகிதம் வரையில் அதிகரித்திருப்பதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி இந்தியா சமூக வலைதளப் பக்கங்களில் வெளியீடு விழா நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் பார்க்க: செல்போனை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்... சாம்சங் கலக்கல்
First published: February 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...