ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

JIO True 5G-யுடன் இணைந்தது Realme : விரைவில் Realme 10 PRO சீரிஸ் அறிமுகம்..!

JIO True 5G-யுடன் இணைந்தது Realme : விரைவில் Realme 10 PRO சீரிஸ் அறிமுகம்..!

ஜீயோவில் ட்ரு 5ஜி + ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ்

ஜீயோவில் ட்ரு 5ஜி + ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ்

jio 5G + realme 10pro series : ஜீயோவில் ட்ரு 5ஜி சேவையைக் கொண்டு வரும் முதல் ஸ்மார்ட் போனாக ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் அதிக வேக 5ஜி சேவையை வழங்கும் ஜீயோ மீண்டும் ரியல் மீ -யுடன் இணைந்துள்ளது. ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ரியல் மீ நிறுவனத்தில் அதிநவீன ட்ரு 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது. இவை ரூ.17,999/- வில் இருந்து தொடங்குகிறது. அதிவேக இணையச் சேவை, 120Hz வளைவு டிஸ்பிளே, மிகக் குறைந்த இடை, 1080 5G சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 108 MP கேமாரவுடன் ரியல் மீ 10 ப்ரோ + 5ஜீ  சீரிஸ்சின் முதன்மையான மாடலாக அறிமுகமாகவுள்ளது.

ட்ரூ ஜியோ 5ஜி சேவையில் அனுபவத்தைத் தரும் வகையில் இந்த மாடல் போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ்சில் வெளியாகு மாடல்கள்:

ரியல் மீ 10 ப்ரோ+ 5ஜி:

Flagship-level 120Hz வளைவு விஷன் டிஸ்பிளே உடன் இந்தியாவின் முதல் முறையாக 2160Hz PWM டிம்மிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த போனில் அளவு 2.333mm அளவுடன் குறைந்த எடையுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TUV Rheinland Flicker ஃப்ரி சான்றிதழுடன் முதன்முதலில் OLED Display-யுடன் வருகிறது. மேலும் இந்த மாடல் போன் 5000mAh பாட்டரி காமாசிடி பெற்றுள்ளது. 17 நிமிடங்களில் 50% சார்ஜிங் திறனுடையது. மேலும் 108MP ProLight Camera with Nonapixel Plus Technology புகைப்படங்களைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறது.

இந்த மாடல் இரண்டு வகைகளில் வருகிறது. 6 RAM+128 ROM மாடல் ரூ.24,999/- இல் விற்பனைக்கு வருகிறது. ஆஃபரில்  ரூ.1000/- வழங்கப்பட்டு ரூ.23,999/- விலையில் அறிமுகமாகிறது. மேலும் வட்டி இல்லாத 6 மாத தவணை சலுகையும் உண்டு.

8 RAM+128 ROM மாடல் ரூ.25,999/- யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் Hyperspace Gold,Dark Matter and Nebula Blue நிறங்களில் கிடைக்கும்.

ரியல் மீ 10 ப்ரோ 5ஜி:

இந்த மாடல் போன் Snapdragon 695 5G processor மற்றும் 120Hz Boundless Display-யுடன் அறிமுகமாகிறது. மேலும் உபயோகப்படுத்துவதற்கு எளிமையாக 1mm Ultra-slim Side Bezels அமைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 108MP ப்ரோ லைட் கேமராவுடன் 16 MP செல்பி கேமரா உள்ளது. ரியல் மீ 10 ப்ரோ+ 5ஜி 5000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 33W Dart Charge, and DualStereo Speakers ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read : UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்

இந்தியாவில் 6ஜிபி RAM+128 ROM மாடல் ரூ.18,999/- மற்றும் 8ஜிபி RAM+128 ROM மாடல் ரூ.19,999/- க்கும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.மேலும் 6 RAM+128 ROM மாடலுக்கு சலுகையாக வங்கி தள்ளுபடி ரூ.1000/- வழங்கப்படவுள்ளது. ரியல் மீ 10 ப்ரோ+ 5ஜி மாடல் வெளியாகும் அதே நிறங்களில் ரியல் மீ 10 ப்ரோ 5ஜி மாடல் போன்களும் வெளிவருகிறது.

இந்தியாவின் அதிவேக 5ஜி இணையச் சேவையை வழங்கும் ஜியோவில் சிஇஓ, ரியல் மீ- யுடன் இணைந்ததைப் பற்றித் தெரிவிக்கையில், ஜியோவில் உண்மையான அதிவேக இணையச் சேவை 5ஜியை ரியல் மீ 10 ப்ரோ சீரிஸ் மக்களுக்கு அளிக்கிறது. அதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

First published:

Tags: 5G technology, Jio, RealMe