ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய Realme 9 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது. Realme 9 4G மொபைலானது Realme GT 2 Pro மற்றும் Realme Buds Air 3 TWS இயர்பட்களுடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஏப்ரல் 12 முதல் Flipkart-ல் மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது Realme 9 4G ஸ்மார்ட் ஃபோன். இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள ரியல்மியின் இந்த புதிய மொபைல், குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு உள்ளது.
இந்தியாவில் Realme 9 மொபைலின் விலை மற்றும் வெளியீட்டு சலுகைகள்:
Realme 9 மொபைல் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB உள்ளிட்ட 2 வேரியன்ட்களில் வருகிறது. 6GB + 128GB வேரியன்ட் மொபைலின் விலை ரூ.17,999 ஆகும். அதேசமயம் Realme 9-ன் 8GB + 128GB வேரியன்ட்டின் விலை இந்தியாவில் ரூ.18,999 ஆகும். Realme 9-ன் விற்பனை Flipkart மற்றும் Realme.com வழியே துவங்கி உள்ளது. அறிமுக சலுகையாக, Flipkart மற்றும் Realme.com-ல் HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் Realme ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது. SBI டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்கள் ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம், ஆனால் இந்தச் சலுகை Flipkart-ல் மட்டுமே கிடைக்கும்.
also read : ரூ.43,900க்கு அறிமுகமாகி உள்ள IPhone மாடலை வெறும் ரூ.28,900க்கு வாங்குவது எப்படி?
Realme 9 மொபைலை வாங்குபவர்களுக்கு Flipkart பல சலுகைகளை அளிக்கிறது..
Flipkart Axis பேங்க் கார்ட் மீது 5% கேஷ்பேக்
Google Nest Hub-ஐ (2வது ஜென்) வெறும் ரூ.4999-க்கு பெறலாம்
Google Nest Mini-யை வெறும் ரூ.1999-க்கு பெறலாம்
கூகுள் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸை ரூ.6999- க்கு பெறலாம்
also read : Flipkart-ல் இவ்ளோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் - முழு விவரம்
Realme 9 ஸ்பெசிஃபிகேஷன்கள்:
Realme 9 4G மொபைல் 1080 × 2400 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்ப்ளிங் ரேட் கொண்ட 6.4-இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைலில் octa-core Qualcomm Snapdragon 680 ப்ராசஸர் மற்றும் Adreno 610 GPU கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் சாம்சங் HM6 சென்சார் கொண்ட 108MP பிரைமரி ஷூட்டர், ஒரு சூப்பர்-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4cm மேக்ரோ ஷூட்டர் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
முன் பக்கம் Realme 9 4G மொபைல் செல்ஃபிகளுக்காக 16 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. இந்த மொபைல் 5000mAh பேட்டரி யூனிட் மற்றும் 33W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த மொபைல் சன்பர்ஸ்ட் கோல்ட், ஸ்டார்கேஸ் ஒயிட் மற்றும் மீடியர் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் 178 கிராம் எடையுடன் வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gadgets