Home /News /technology /

ரிசர்வ் வங்கி வெளியிட்ட டிஜிட்டல் கடன் சேவைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

ரிசர்வ் வங்கி வெளியிட்ட டிஜிட்டல் கடன் சேவைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

டிஜிட்டல் கடன் மூலம் கடன் விநியோகத்தின் சீரான வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கடன் மூலம் கடன் விநியோகத்தின் சீரான வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கடன் மூலம் கடன் விநியோகத்தின் சீரான வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சமீப ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுக்கும் நோக்கில் டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்ஸ்களை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    இவை டிஜிட்டல் கடன் கொடுக்கும் ஆப்ஸ் மற்றும் இவற்றுடன் டை-அப்பில் இருக்கும் கடன் வழங்கும் அமைப்பு மீதான ஆய்வு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்கும். டிஜிட்டல் கடன் மூலம் கடன் விநியோகத்தின் சீரான வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கட்டமைப்பானது, ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களால் மட்டுமே கடன் வணிகத்தை மேற்கொள்ள முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கி வணிக நடத்தை தேவைகளைப் பரிந்துரைத்துள்ளதோடு மட்டுமின்றி கடன் வாங்குபவர்களின் தரவு பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது.

    இதனிடையே டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் 3 வகைகளாகக் கீழ் வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

    1. ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்

    2. மற்ற சட்டப்பூர்வ/ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், ஆனால் RBI ஆல் கட்டுப்படுத்தப்படாதவை

    3. சட்டப்பூர்வ / ஒழுங்குமுறை விதிகளின் வரம்பிற்கு வெளியே கடன் வழங்கும் நிறுவனங்கள்

    புதிய விதிமுறைகளின் படி அனைத்து கடன் வழங்கல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் (disbursals and repayments) ஆகியவை, கடன் சேவை வழங்குநரின் அல்லது மூன்றாம் தரப்பினரின் எந்தவொரு passthrough/ pool account-ம் இல்லாமல், கடன் வாங்குபவர் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடன் சேவை வழங்குநருக்குச் செலுத்த வேண்டிய அனைத்து ஃபீஸ் மற்றும் சார்ஜஸ்கள் பேங்க் மற்றும் நான்-பேங்க்ஸால் செலுத்தப்பட வேண்டும், கடன் வாங்கியவரால் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முன் கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட் (KFS - Key Fact Statement) கடன் வாங்குபவருக்கு வழங்கப்பட வேண்டும். அதே போல ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, கடன் வாங்குபவர்களின் வெளிப்படையான அனுமதியின்றி கடன் வரம்பைத் தானாக அதிகரிப்பதையும் விதிகள் தடை செய்கின்றன. வருடாந்திர சதவீத விகிதத்தில் (annual percentage rate) டிஜிட்டல் கடன்களின் அனைத்து உள்ளடக்கிய செலவுகளும் (all inclusive cost) கடன் வாங்குபவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    மேலும் நிறுவனங்கள் ஒரு கூலிங்-ஆஃப் காலத்தை வழங்க வேண்டும், இதன் போது கடன் வாங்குபவர்கள் அசல் மற்றும் விகிதாச்சார செலவுகளை எந்த அபராதமும் இல்லாமல் செலுத்துவதன் மூலம் டிஜிட்டல் கடன்களிலிருந்து வெளியேறலாம். DLA-க்கள் மூலம் பெறப்படும் எந்தவொரு கடனும் அதன் தன்மை அல்லது தவணைக் காலத்தைப் பொருட்படுத்தாமல் REs மூலம் கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு (Credit Information Companies) தெரிவிக்கப்பட வேண்டும். முக்கியமாக ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள், டிஜிட்டல் கடன் தொடர்பான புகார்களைக் கையாள அனைத்து கடன் சேவை வழங்குநர்களும் பொருத்தமான குறை தீர்க்கும் அதிகாரிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    DLA-க்கள்/LSP-க்கள் மூலம் கடன் வாங்கியவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவை நீக்குவதற்கான விருப்பத்தைத் தவிர, குறிப்பிட்ட தரவைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ கடன் வாங்குபவர்களுக்கு விருப்பம் வழங்கப்பட வேண்டும்.இதனிடையே EV financing company Revfi-ன் நிறுவனர் சமீர் அகர்வால் பேசுகையில், டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி அமைத்த பேனலின் பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

    இந்த பரிந்துரைகள் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் டிஜிட்டல் கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வரும். எனினும் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த ரிசர்வ் வங்கி போதுமான நேரத்தை அனுமதிக்கும் மற்றும் ஒரு சுமுகமான செயல்முறையை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Loan app, RBI

    அடுத்த செய்தி