• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இவை சூரியனை விட அதிக வெப்பம் கொண்டவை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இவை சூரியனை விட அதிக வெப்பம் கொண்டவை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

சூரியனை விட அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளதாக புனே விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை மிகவும் அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வகையை சார்ந்தவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  • Share this:
    புனே-வை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் விஞ்ஞானிகள், மிகவும் அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வகையை சார்ந்த எட்டு நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவை சூரியனை விட அதிக வெப்பம் கொண்டவை எனவும், வழக்கத்திற்கு மாறாக வலுவான காந்தப்புலங்களையும் காற்றையும் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். புனே வானியற்பியல் தேசிய மையத்தில் உள்ள மாபெரும் ரேடியோ தொலைநோக்கி மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

    புனே விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ள 15 ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்களில் 11. GMRT என்றழைக்கப்படும் மாபெரும் ரேடியோ தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 8 அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. GMRT-யை பரந்த அலைவரிசை மற்றும் அதிக உணர்திறனை கொண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக புனே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    GMRT மூலம் கண்டிபிடிக்கப்பட்ட ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வழக்கத்திற்கு மாறாக வலுவான காந்தப்புலங்கள் மற்றும் காற்றைக் கொண்டவை. அவை சூரியனை விட வெப்பமானவை. அதனால் ஒரு கலங்கரை விளக்கம் போன்ற பிரகாசமான ரேடியோ துடிப்புகளை வெளியிடுகின்றன. ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் முதன்முதலில் 2000-மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

    GMRT என்பது புனேவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடாத் என்ற இடத்தில் 150-1420 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ரேடியோ தொலைநோக்கி ஆகும். இது 30 ஆண்டெனாக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 45 மீட்டர் விட்டம் கொண்டவை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: