முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / செயற்கை நுண்ணறிவில் முன்னிலை பெறும் சக்தி இந்தியாவிடம் உள்ளது - முகேஷ் அம்பானி நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவில் முன்னிலை பெறும் சக்தி இந்தியாவிடம் உள்ளது - முகேஷ் அம்பானி நம்பிக்கை

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னிலை பெறத் தேவையான டிஜிட்டல் மூலதனம் இந்தியாவிடம் உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

செயற்கை நுண்ணறிவு, RAISE 2020 என்ற பெயரில் சர்வதேச மெய்நிகர் தொழில்நுட்ப உச்சி மாநாடு இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக சமூக மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க 5 நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டின் தொடக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக பங்கேற்றார். தொழில்முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவுத்துறையில் வளர்ச்சி பெற தரவுகளே அடிப்படைத் தேவை என்றார்.

தரவுகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் வளர்ந்துவரும் தகவல் மையங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னெடுப்புகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சியை வளர்த்தெடுத்தது. நுண்ணறிவு தரவுகள்தான் டிஜிட்டல் மூலதனம்.

1.3 பில்லியன் இந்தியர்களை டிஜிட்டலாக தொழில்நுட்பத்தில் வளர்த்தெடுப்பதுதான் வேகமான வளர்ச்சி, சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டெழும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Artificial Intelligence