முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / RAISE 2020: 125 நாடுகள் பங்கேற்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாடு -பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

RAISE 2020: 125 நாடுகள் பங்கேற்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாடு -பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

மோடி

மோடி

எழு(RAISE) 2020 சர்வேதச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கவுள்ளார்.

  • Last Updated :

செயற்கை நுண்ணறிவு, எழு 2020, சமூக முன்னேற்றத்துக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்புகளின் கீழ் சர்வதேச மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் உச்சி மாநாட்டை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சி மாநாடு அக்டோபர் 9-ம் தேதிவரை நடைபெறும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக சமூக மாற்றம், சமூக உள்ளடக்குதல், சமூக முன்னேற்றத்தை எட்டுவது குறித்த இந்தியாவின் பார்வை போன்றவை இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த மாநாட்டில் தொழில்நிறுவன அதிபர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், பங்கேற்று அவர்களுடைய கருத்துகளைப் பகிர்வார்கள். சமூகம் பலனடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சமூகக் குழுக்களை முன்னேறமடையச் செய்வதில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கருத்துகளைப் பகிர்வார்கள்.

இந்த உச்சி மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஐ.பி.எம் நிறுவனத் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ராட் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், ‘உயிர்களை மாற்றம் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சுகாதாரத்துறை, கல்வி, நிதி, விவசாயம், அரசாங்கம் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரித்துவருகிறோம். இதனுடைய தரவுகள் மற்றும் கண்டுபிடிப்பு வலிமைகளின் மூலம் உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகமாக இந்தியா உருவாக முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

எழு 2020 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 125 நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், கல்வித்துறையில் பங்குதாரர்களாக இருக்கும் 38,700-க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Artificial Intelligence, PM Modi