Home /News /technology /

6,000க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் ஹை-ஸ்பீட் வைஃபை வழங்கும் ரெயில்டெல்!

6,000க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் ஹை-ஸ்பீட் வைஃபை வழங்கும் ரெயில்டெல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் வைஃபை சேவையை வழங்குவதற்கான விளிம்பில் இருப்பதாக ரெயில்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியன் இரயில்வே, இரயில்வே அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்கும் நிறுவனமான ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel Corporation of India Ltdl) ஆனது இப்போது இந்தியாவில் உள்ள 6,000 இரயில் நிலையங்களில் அதிவேக வைஃபை இண்டர்நெட்டை வழங்குகிறது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், அரசாங்கத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் அதன் வைஃபை இண்டர்நெட் சொல்யூஷனை 6,100 இரயில் நிலையங்களில் வழங்குகிறது, மேலும் ரெயில்டெல்-இன் இந்த பட்டியலில் சமீபத்திய இணைப்பாக உத்தரபிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் உள்ள உபர்னி இரயில் நிலையமும் சேர்ந்துள்ளது.

முன்னதாக, நாட்டில் உள்ள இரயில் நிலையங்கள் முழுவதும் வைஃபை-ஐ அமைப்பதற்கு ரெயில்டெல் நிறுவனமானது, கூகுளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி கொண்டது. தற்போது ரெயில்டெல் நிறுவனம் உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுள் உடனான கூட்டாண்மையிலிருந்து விலகி, சொந்தமாக சேவைகளை வழங்கி வருகிறது.

ஹால்ட் ஸ்டேஷன்களை (Halt Stations) தவிர்த்து, இந்தியாவில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் வைஃபை சேவையை வழங்குவதற்கான விளிம்பில் இருப்பதாக ரெயில்டெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வைஃபை சேவையை வழங்கும் 6,100 இரயில் நிலையங்களில், 5,000 க்கும் மேற்பட்ட நிலையங்கள் நாட்டின் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன என்பதையும் இந்த பொதுத்துறை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையை வழங்குவதற்கான ரெயில்டெல் இன் யோசனையானது, கடந்த 2015 ஆம் ஆண்டில், குறிப்பிட்ட சேவையின் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேட்டிங்கில் கூகுளின் வலுவான பங்களிப்பு இருந்தபோது உருவாக்கப்பட்டது. இந்த யோசனைக்கு பின்னால் ரெயில்டெல் ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது மற்றும் இரயில் நிலையங்களில் மக்களுக்கான வைஃபை சேவையை எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு வந்தும் சேர்த்தது.

நாட்டின் கிராமப்புறங்களில் 'பிரீமியம் இண்டர்நெட் கனெக்ஷன்' சேவைகள் கிடையாது. ஆனாலும் கூட தற்காலத்தில் 'மொபைல் கனெக்ஷன்' மிகவும் வலுவாக உள்ளது, மேலும் எவரும் ஒரு மொபைல் போனை வாங்கும் அளவிற்கு அது மலிவான விலைக்கும் இறங்கி வந்துள்ளது. இந்த இடத்தில், ஹை-ஸ்பீட் இண்டர்நெட்டை வழங்குவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களுக்குள் எளிமையாக புக முடியும் மற்றும் மொபைல் போன்களில் கன்டென்ட்-ஐ டவுன்லோட் செய்யவும் முடியும்.

Also read... ஃபோன் மற்றும் மெசேஜ் ஆப்களை பயன்படுத்தி, ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

ரெயில்டெல் வழங்கும் இந்த இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்த, உங்கள் மொபைலில் ரெயில்டெல் வைஃபை நெட்வொர்க்கை கண்டறிய வேண்டும், பின் உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும், பின் ஒடிபி பாஸ்வேர்ட் மூலம் குறிப்பிட்ட வைஃபை உடன் கனெக்ட் ஆக முடியும். ரெயில்டெல் வழங்கும் வைஃபை நெட்வொர்க்கால் ஒரு டிவைஸில் 20 எம்பிபிஎஸ் வரையிலான இணைய வேகத்தை வழங்க முடியும் மற்றும் இண்டர்நெட் வேகம் ஆனது இரயில் நிலையத்தில் உள்ள பயனர்களின் "அடர்த்தியை" பொறுத்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வைஃபை நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கன்டென்ட்-ஐ டவ்ன்லோட் செய்ய விரும்பும் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு குறிப்பிட்ட வரம்பும் இருக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Railway, Wifi

அடுத்த செய்தி