இந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..!

PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் அதிரடியான பல ஆச்சர்ய ஆஃபர்களும் காத்திருக்கின்றன.

இந்தியாவில் ஜியோ உடன் கைகோர்த்த PUBG..!
PUBG- ஜியோ
  • News18
  • Last Updated: July 10, 2019, 9:03 PM IST
  • Share this:
ஆன்லைன் கேம் உலகின் ராயல் கேம் ஆகக் கருதப்படும் PUBG இந்தியாவில் லைட் வெர்ஷனாக ஜியோ உடன் கைகோர்த்து களமிறங்கி உள்ளது.

சமீபத்தில் PUBG ஆன்லைன் கேம் பீட்டா வெர்ஷனில் PUBG லைட் ஆக அறிமுகமானது. இந்தியாவில் பெரும் ரசிகர்களைக் கொண்ட PUBG பயனாளர்களின் அனுபவத்தை மேலும் ருசிகரமாக்க ஜியோ உடன் இணைந்துள்ளது. புதிய டிஜிட்டல் உலகின் இரு பெரிய ப்ராண்டுகள் இந்திய ரசிகர்களுக்காக ஒன்றிணைந்துள்ளன.

PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் அதிரடியான பல ஆச்சர்ய ஆஃபர்களும் காத்திருக்கின்றன.


ஜியோ இலவச பரிசு பெறுவது எப்படி?

1. PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்கள் https://gamesarena.jio.com/#/ என்ற இணையதளப் பக்கத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2. உங்களது பதிவு செய்யப்பட்ட மெயில் முகவரிக்கு ஒரு வெரிஃபிகேஷன் லிங்க் வரும்.3. வெரிஃபிகேஷன் முடிந்த பின்னர் உங்களுக்கு ஒரு பரிசு கோட் மெயில் மூலமாக வரும்.

பரிசு கோட் பயன்படுத்துவது எப்படி?

1. PUBG லைட்-ஐ நீங்கள் டவுன்லோடு செய்து உங்களைப் பதிவு செய்திகொண்ட பின்னர், மெனு ஸ்டோர் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. மெனு ஆப்ஷனில் ‘ஆட் போனஸ்/கிஃப்ட் கோட்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. தற்போது உங்களது கோட்-ஐ பதிவிட்டு உங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும்.

மேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகமானது ஸ்பாட்டிஃபை லைட்..!
First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்