பப்ஜிக்கு ஏன் தடையில்லை...? நெட்டிசன்களின் கேள்வியும் விளக்கமும்...

TIkTok Ban | PUBG | டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விழுந்த நிலையில் பப்ஜிக்கு ஏன் தடையில்லை என்று கேள்விகள் எழுந்தன

பப்ஜிக்கு ஏன் தடையில்லை...? நெட்டிசன்களின் கேள்வியும் விளக்கமும்...
கோப்புப்படம்
  • Share this:
ஷேர் இட். டிக்டாக், யுசி பிரவ்சர் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ பிரிவை பயன்படுத்தி செல்போன் செயலிகளுக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு அறி்விப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இந்த செயலிகளில் ஏற்படுவதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரிலும் இந்த செயலிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் செல்போன், இணைய பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Cam Scanner, Vigo Video, Mi Video Call, Xiaomi, Clash of Kings ஆகிய செயலிகளுக்கும் தடை விழுந்துள்ளது. இந்தியாவில் கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து மேற்கண்ட செயலிகள் நீக்கப்படும்.

எனினும், குரோம் உள்ளிட்ட பிரவுசர்கள் மூலம் சென்று மேற்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம் என்றாலும், அதற்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மூலம் மேற்கண்ட செயலிகள் மற்றும் அது சார்ந்த தளங்கள் முடக்கப்பட உள்ளன.


படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

இந்தியாவில் டிக்டாக் செயலியைப் போல அதிகம் பேர் பயன்படுத்துவது பப்ஜி செயலி. கேம் வகையைச் சேர்ந்த இந்த செயலியும், இந்தியாவில் பலத்த தாக்கத்தை உண்டாக்கியது. பலர் இந்த கேம் விளையாட்டுக்கு உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

விமர்சனங்களை சந்தித்தாலும் பப்ஜி தற்போது வரை டாப் கேம் ஆப் ஆக உள்ளது. டிக்டாக்கை போலவே பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளத்தில் விவாதிக்க ட்ரெண்டிங்கில் இந்த டாபிக் இருக்கிறது.

ஆனால், பப்ஜி செயலியானது சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டது அல்ல. PlayerUnknown’s Battlegrounds or PUBG என்ற கேம் Brendan Greene என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் அயர்லாந்தை சேர்ந்தவர் ஆவார்.

எனினும், பப்ஜிக்கும் சீனாவுக்கும் தொடர்பு உள்ளது. பப்ஜி கேமின் செல்போன் வெர்சனை மேம்படத்தியது டென்செண்ட் எனும் சீன நிறுவனம்தான். தற்போது பப்ஜியை நிர்வகிக்கும் புளூஹோல் என்ற நிறுவனத்தில் டென்செண்ட் 10 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட செயலிகளைப் போல பப்ஜி நேரடி சீன நிறுவனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading