மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏற்ற PUBG மொபைல் லைட்..!

மொபைல் லைட் வெர்ஷனுக்கு வரும் புதிய ப்ளேயர்களுக்கு பல பரிசுகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 7:14 PM IST
மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏற்ற PUBG மொபைல் லைட்..!
pubg மொபைல் லைட்
Web Desk | news18
Updated: July 26, 2019, 7:14 PM IST
இந்திய ரசிகர்களுக்காகவே மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களிலும் விளையாடக்கூடிய வகையில் PUBG மொபைல் லைட் வெளியாகி உள்ளது.

இன்று வெளியான PUBG மொபைல் லைட் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ளும் வகையில் உள்ளது. கணினிகளுக்கு ஏற்ற PUBG லைட் போல இது ஸ்மார்ட்ஃபோன்களுக்கான PUBG மொபைல் லைட். ஆன்லைன் கேமிங் உலகின் ராயல் கேம் ஆகக் கருதப்படும் PUBG, அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் விளையாட கிடைக்க வேண்டும் என்றே இந்த ஏற்பாடு என்று PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

400MB அளவிலான ஸ்டோரேஜ் கொண்டதாகவே புதிய வெர்ஷன் உள்ளது. 2 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் ஏற்றதாகவே மொபைல் லைட் உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களையே பயன்படுத்துவதால் PUBG நிறுவனம் இம்முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறுகிறது. மொபைல் லைட் வெர்ஷனுக்கு வரும் புதிய ப்ளேயர்களுக்கு பல பரிசுகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க: 2019-ன் இறுதியில் வெளிவருகிறது ’வாட்ஸ்அப் பே’!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...