• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • யூடியூபில் வெளியான PUBG மொபைல் இந்தியா டீஸர் - உடனே டெலிட் செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

யூடியூபில் வெளியான PUBG மொபைல் இந்தியா டீஸர் - உடனே டெலிட் செய்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

யூடியூபில் வெளியான PUBG மொபைல் இந்தியா டீஸர்

யூடியூபில் வெளியான PUBG மொபைல் இந்தியா டீஸர்

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் இந்த மொபைல் விளையாட்டு மீண்டும் எப்போது இந்தியாவில் தொடங்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மொபைல் வீடியோ கேம் விளையாட்டு பிரியர்களின் ஃபேவரைட் கேமாக இருந்த பப்ஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் APP-கள் மீதான மத்திய அரசின் தடை காரணமாக ஒரிஜினல் PUBG மொபைல் மற்றும் PUBG மொபைல் லைட் கேம்களை இந்திய யூசர்களால் விளையாட முடியாமல் போனது. இதன் பின் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் இந்த மொபைல் விளையாட்டு மீண்டும் எப்போது இந்தியாவில் தொடங்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர். PUBG மொபைல் இந்தியா மீண்டும் பப்ஜி கேமை இந்தியாவில் துவக்க சில காலமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விளையாட்டு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த தடைக்கு பல மாதங்களுக்குப் பிறகு, இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட PUBG மொபைலின் புதிய பதிப்பை வழங்க சீனாவின் டென்சென்ட் கேம் மூலம் வர உள்ளதாக PUBG இன் பேரண்ட் நிறுவனமான தென் கொரியாவை சேர்ந்த கிராப்டன் வீடியோ கேம் ஹோல்டிங் நிறுவனம் அறிவித்தது. இளைய வயதினருக்கு ஆரோக்கியமான விளையாட்டுப் பழக்கத்தை ஊக்குவிக்க விளையாட்டு நேரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு அம்சத்தை நிறுவனம் உள்ளடக்கும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், நிறுவனம் PUBG கேமுடன் இந்தியாவிற்கு திரும்பி வருவதில் மத்திய அரசிடமிருந்து பல தடைகளை எதிர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே PUBG மொபைல் இந்தியாவின் யூடியூப் பேஜை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் யூசர்கள் “All new PUBG Mobile coming to India #2." என்ற தலைப்பில் ஒரு புதிய வீடியோவுக்கான அறிவிப்பை பெற்றதாக கூறியுள்ளனர். எனினும் இந்த தலைப்பில் வெளியான 6 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலே PUBG மொபைல் இந்தியா நிறுவனத்தால் யூடியூபிலிருந்து அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது,

Also read... இந்தியாவுக்கு உதவும் அமேசான் - 100 வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்ய முடிவு!

இத்தகவல்களை சமூக ஊடகங்கள் மூலமாக PUBG ரசிகரிகள் ஷேர் செய்து உள்ளனர். அதே போல அகற்றப்பட்ட டீஸரில் என்ன காட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் நிறுவனம் அதில் ஒரு வார்த்தையும் பகிரவில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். PUBG மொபைல் இந்தியாவின் யூடியூப் பக்கம் 2020 நவம்பரில் திரும்புவதாக அறிவிக்கும் முதல் டீஸரைப் பதிவேற்றியது. முன்னதாக PUBG Mobile India-வின் யூடியூப் பேஜ் கடந்த நவம்பர் 2020 இல் மீண்டும் திரும்புவதாக அறிவிக்கும் முதல் டீஸரைப் பதிவேற்றியது.



இதனால் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட PUBG மொபைல் கேம் மீண்டும் தொடங்கப்படும் என ரசிகர்கள் நீண்ட மாதங்களாக காத்திருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியான டீசர் PUBG மொபைல் இந்தியா விரைவில் வரும் என்ற தகவலை தவிர எதையும் வெளிப்படுத்தவில்லை மற்றும் இந்த வீடியோவும் விரைவாக அகற்றப்பட்டது PUBG ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: