மன அழுத்தத்தைக் குறைக்க, நேரத்தைக் கடக்க முன்பெல்லாம் கேம் விளையாடுவது வழக்கமாக இருந்தது. இன்றைக்கு கேம் ஒரு வேலையாக பலருக்கும் உள்ளது. மொபைலில் கேம் விளையாடுவது சில கேமிங் பிரியர்களுக்கு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ மூலம் இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் பப்ஜி கேம் தடைசெய்யப்பட்டது. அதனால் இந்தியா போன்றதொரு மிகப்பெரிய சந்தையில் அந்த கேம் இல்லாமல் போனது.
இந்தியாவில் தடை இருந்தபோதிலும், உலகளவில் 2020ம் ஆண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் ஆகியவற்றில் உலகளவில் அதிக வருவாயை PUBG மொபைல் பெற்றுள்ளது என்று சென்சார் டவரின் (Sensor Tower) சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டு வருவாயில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான (அதாவது சுமார் ரூ. 7,351 கோடி) வருமானத்தை ஈட்டிய ஐந்து மொபைல் கேம்களில் PUBG மொபைலும் ஒன்று.
சென்சார் டவரின் ஸ்டோர் இன்டலிஜென்ஸ் தரவுகளின்படி, PUBG மொபைல், அதன் சீன பதிப்பான 'கேம் ஃபார் பீஸ்' உடன் இணைந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,113 கோடி) வருவாய் ஈட்டியது, இது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கேமின் வருவாயிலிருந்து 64.3 சதவீதம் அதிகம். PUBG மொபைலுக்குப் பிறகு, ஹானர் ஆஃப் கிங்ஸ் (Honor of Kings) இந்த ஆண்டு வருவாயில் மொத்தம் 2.5 பில்லியன் டால ரைப் பெற்று (சுமார் ரூ .18,378 கோடி) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
சென்சார் டவர் அறிக்கை இந்த ஆண்டு மொபைல் கேம்களின் இத்தகைய வெற்றிக்கு COVID-19 தொற்றுநோய் ஒரு பெரிய காரணம் என்றது. மேலும் தொற்றால் உலகின் பெரும்பகுதி ஊரடங்கை அனுபவித்ததாலும், மக்கள் வீட்டிற்குள் நேரத்தைச் செலவிட்டதும் ஒரு முக்கியக் காரணம் என குறிப்பிட்டுள்ளது. 2020ம் ஆண்டில், மொபைல் கேம்கள் சுமார் 75 பில்லியன் டாலர்களை ஈட்டின, இது 2019-ஐ விட 19.5 சதவீதம் அதிகமாகும்.
Also read: இறுதிக் கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்.. ஜெயிலுக்குச் சென்ற கேப்ரியல்லா, ஷிவானி..
சென்சார் டவர் அறிக்கையின்படி, PUBG மொபைல் மற்றும் ஹானர் ஆஃப் கிங்ஸ் (Honor of Kings) ஆகியவை 2019ம் ஆண்டில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளன. மேலும், நான்டிக்கிலிருந்து போகிமொன் ஜிஓ (Pokemon GO) இந்த ஆண்டு மூன்றாவது மிக உயர்ந்த வருவாயாக 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,820 கோடி) ஈட்டியது. போகிமொன் GO-வுக்குப் பிறகு, மூன் ஆக்டிவிலிருந்து காயின் மாஸ்டர் மற்றும் ராப்லாக்ஸ் கார்ப்பரேஷனின் ரோப்லாக்ஸ் (Coin Master from Moon Active and Roblox from Roblox) முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 117 பிற சீன ஆப்ஸ்களுடன் PUBG மொபைல் தடை செய்யப்பட்டது. PUBG மொபைல் மீதான தடைக்குப் பிறகு, விளையாட்டின் தயாரிப்பாளர்கள் சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸை வெளியீட்டாளர்கள் எனும் நிலையிலிருந்து நீக்கி, இந்தியாவுக்கு குறிப்பாக PUBG Mobile India என அழைக்கப்படும் விளையாட்டின் புதிய பதிப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
PUBG மொபைல் இந்தியா எப்போது தொடங்கப்படும் என்று தெரியவில்லை என்றாலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றவுடன் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் கேமிங் சவுகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது போன்களின் ரேம், ப்ராஸ்சஸ்சர் மற்றும் கிராப்பிக்ஸ் அம்சங்களை மேம்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நவீன மேம்பாடுகளால், உயர்ரக கேம்கள்கூட ஸ்மார்ட்போன்களில் சாத்தியமாகியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்