பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது..!- பதிவு செய்யும் நடைமுறைகள் என்ன?

ஜூலை 3-ம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரையில் முன்பதிவு நடைபெறும்.

Web Desk | news18
Updated: June 21, 2019, 1:51 PM IST
பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது..!- பதிவு செய்யும் நடைமுறைகள் என்ன?
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: June 21, 2019, 1:51 PM IST
இந்தியாவில் பப்ஜி லைட் விரைவில் அறிமுகம் ஆக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ளது.

ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் அறிமுகமான பப்ஜி லைட், பப்ஜியின் மிகப்பெரும் சந்தையான இந்தியாவில் களம் இறங்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் பப்ஜி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஒரிஜினல் கம்ப்யூட்டர் வெர்ஷனின் லைட் வெர்ஷனாக அறிமுகம் ஆவதுதான் பப்ஜி லைட். பப்ஜி லைட் விளையாட பிரத்யேக GPU ஏதும் தேவையில்லை. கம்ப்யூட்டர், லேப்டாப் என இலகுவான ஸ்டோரேஜ் கொண்ட கேட்ஜெட்ஸ் மூலமாகவே விளையாட முடியும். அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதி அறிவிக்காத நிலையில் முன்பதிவு தொடங்கியுள்ளது.


பப்ஜி லைட் முன்பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

பப்ஜி லைட் பக்கத்தில் ‘Participate Event’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய முறையில் எளிமையாக ஃபேஸ்புக் கணக்கும் மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜூலை 3-ம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரையில் முன்பதிவு நடைபெறும்.

மேலும் பார்க்க: நம்பகமான கரன்ஸியா ஃபேஸ்புக் ‘லிப்ரா’?
First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...