இந்தியாவுக்கு வருகிறது ‘பப்ஜி லைட்’!

ஜூன் 25-ம் தேதி PUBG Lite வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு வருகிறது ‘பப்ஜி லைட்’!
பப்ஜி
  • News18
  • Last Updated: June 8, 2019, 3:28 PM IST
  • Share this:
இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக கொண்டிருக்கும் PUBG, தற்போது தனது ’லைட்’ வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஹாங்காங், தைவான், பிரேசில், வங்கதேசத்தைத் தொடர்ந்து PUBG-ன் மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றான இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகம் ஆகிறது PUBG லைட். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை PUBG இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தாஜ்மஹால் புகைப்பட பின்னணியில் ‘விரைவில் PUBG லைட்' என்ற டேக் உடன் வெளியிட்டுள்ளது.

ஒரிஜினில் PC வெர்ஷனின் லைட் வெர்ஷனாக அறிமுகம் ஆக உள்ளது PUBG Lite. இனி PUBG விளையாட பிரத்யேகமான GPU பொருத்த சிரமப்படாமல் குறைந்த பட்ஜெட் PC, லேப்டாப் என PUBG விளையாட்டை மிகவும் லைட் ஆகவே விளையாடலாம்.


PUBG லைட் விளையாட குறைந்தபட்ச தேவை:

-OS: Windows 7,8,10 64Bit

-CPU: Core i3 @2.4Ghz-RAM: 4GB

-GPU: Intel HD 4000

-HDD: 4GB

பரிந்துரைகள்:

-OS: Windows 7,8,10 64Bit

-CPU: Core i5 @2.8Ghz

-RAM: 8GB

-GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870

-HDD: 4GB

வருகிற ஜூன் 25-ம் தேதி PUBG Lite வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொபைல் வெர்ஷனுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து PUBG விளையாட்டின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது.

மேலும் பார்க்க: வீட்டு சாப்பாடு வழங்க புதிய ஆப்! ஸ்விகியின் அசத்தல் அறிமுகம்

புதுமணத்தம்பதியினர் விரும்பும் பப்ஜி!

First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்