ஜூலை 4-ம் தேதி அறிமுகமாகும் PUBG லைட் பீட்டா வெர்ஷன்..!

எளிமையாக ஃபேஸ்புக் கணக்கும் மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜூலை 3-ம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரையில் முன்பதிவு நடைபெறும்.

Web Desk | news18
Updated: July 2, 2019, 11:12 AM IST
ஜூலை 4-ம் தேதி அறிமுகமாகும் PUBG லைட் பீட்டா வெர்ஷன்..!
pubg
Web Desk | news18
Updated: July 2, 2019, 11:12 AM IST
இந்தியாவில் வருகிற ஜூலை 4-ம் தேதி PUBG லைட் பீட்டா வெர்ஷன் அறிமுகம் ஆக உள்ளது.

கடந்த வாரம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் முன்னரே PUBG லைட்-க்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் PUBG லைட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் PUBG லைட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரிஜினல் கம்ப்யூட்டர் வெர்ஷனின் லைட் வெர்ஷனாக அறிமுகம் ஆவதுதான் பப்ஜி லைட்.


பப்ஜி லைட் விளையாட பிரத்யேக GPU ஏதும் தேவையில்லை. கம்ப்யூட்டர், லேப்டாப் என இலகுவான ஸ்டோரேஜ் கொண்ட கேட்ஜெட்ஸ் மூலமாகவே விளையாட முடியும். PUBG லைட் விளையாடுவதற்கான குறைந்தபட்ச தேவைகள்:
-OS: Windows 7,8,10 64Bit

-CPU: Core i3 @2.4Ghz

Loading...

-RAM: 4GB

-GPU: Intel HD 4000

-HDD: 4GB

பரிந்துரைகள்:

-OS: Windows 7,8,10 64Bit

-CPU: Core i5 @2.8Ghz

-RAM: 8GB

-GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870

-HDD: 4GB

பப்ஜி லைட் முன்பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

பப்ஜி லைட் பக்கத்தில் ‘Participate Event’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய முறையில் எளிமையாக ஃபேஸ்புக் கணக்கும் மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜூலை 3-ம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரையில் முன்பதிவு நடைபெறும்.

மேலும் பார்க்க: ஃபேஸ்புக் டிஜிட்டல் கரன்ஸி ‘லிப்ரா’ எப்படிச் செயல்படும்..?
First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...