விருது வென்றதால் ப்ளேயர்ஸ்-க்கு ட்ரீட் வைக்கும் PUBG!

PUBG கேம் விளையாடுபவர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது வென்றதால் ப்ளேயர்ஸ்-க்கு ட்ரீட் வைக்கும் PUBG!
PUBG கேம் விளையாடுபவர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • News18
  • Last Updated: December 5, 2018, 4:14 PM IST
  • Share this:
கூகுள் ப்ளே ஸ்டோர் வழங்கும் 2018-க்கான சிறந்த கேம் விருதை PUBG வென்றுள்ளது. இதற்காக இந்த கேம் விளையாடுபவர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை PUBG அறிவித்துள்ளது.

கேம் உலகின் ராயல், ட்ரெண்ட் கேம்கள் அனைத்தும் இந்த 2018-ம் ஆண்டில் PUBG இடம் படுதோல்வி அடைந்து வருகின்றன. சமீபத்தில் கூகுள் ப்ளே லிஸ்ட் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டிய கேம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.

PUBG வருவாயில் மட்டுமல்லாது கூகுள் வழங்கும் சிறந்த கேம்- 2018 என்ற விருதையும் தற்போது தட்டிச் சென்றுள்ளது. இதுபோக Fan favourite Game, Overall Game of the Year ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகமான PUBG, தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டது.


தற்போது மூன்று சீசன்களை நிறைவு செய்து 4-வது சீசனையும் அறிமுகப்படுத்தி உள்ள PUBG தனது ப்ளேயர்ஸ்-க்காக சிறப்புப் பரிசை அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் PUBG விளையாடுபவர்கள் 2 டாலர்கள் வரையில் கேம் க்ரெடிட் மூலம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க: கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமா?- ஆ.ராசா பதில்
First published: December 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading