பப்ஜி விளையாட்டுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா?

இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி கேமுக்கு வந்தால், நிச்சயம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

news18
Updated: March 23, 2019, 10:33 AM IST
பப்ஜி விளையாட்டுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா?
பப்ஜி வீடியோ கேம்
news18
Updated: March 23, 2019, 10:33 AM IST
பப்ஜி வீடியோ கேமை தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாதபடி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விளையாட்டு வினையாகும் என்பது இப்போது மொபைல் கேம் பப்ஜிக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

பப்ஜி விளையாட்டுக்கு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருவது, பல பெற்றோர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமாநிலங்களில் இந்த விளையாட்டை விளையாடும் இளைஞர்களை காவல்துறை கைது செய்தும் வருகிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக, தெலங்கானா மாநிலம் ஜகித்தியாலைச் சேர்ந்த 20 வயது இளைஞரின் உயிரையும் பறித்தது. தொடர்ந்து 45 நாட்களாக பப்ஜி கேமை விளையாடி வந்த இளைஞரின் கழுத்து நரம்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது.

இந்நிலையில், பப்ஜி வீடியோ கேமை தினமும் 6 மணி நேரத்துக்கு மேல் விளையாட முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

பப்ஜி நோட்டிஃபிகேஷன்


Loading...

இந்த தகவல், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் இன்று 6 மணி நேரம் பப்ஜி விளையாடி விட்டீர்கள். இனி நாளை விளையாட வாருங்கள் என கேமில் வரும் அலெர்ட் மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி கேமுக்கு வந்தால், நிச்சயம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Also See...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...