இந்திய விண்கல ஏவுகணை பி.எஸ்.எல்.வி 54 இன்று காலை 11.56 மணி அளவில் சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்து தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்தியாவின் புவிசார் கண்காணிப்பு oceansat 06 உடன் 2 பூட்டானின் நானோ சாட்டிலைட் உட்பட, 8 இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் வில்னனில் பாய்ந்தது.
முதற்கட்டமாக அதன் முதற்கட்ட பாதையில் oceansat 06 ஐ விடுவித்தது. அதன் பின்னர் பாதை மாறி இரண்டாம் கட்ட வழிப்பாதையில் மற்ற 8 நானோ செயற்கைகோள்களை அதன் தனிப்பட்ட பாதைகளில் சேர்த்தது.
மதியம் 1: 45 அளவில் தொடங்கிய நானோ செயற்கைகோள்கள் விடுவிப்பு வெற்றிகரமாக முடிந்ததும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் மற்ற செயற்கைகோள் தயாரிப்பாளர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்திய - பூட்டான் புரிந்துணர்வின் இன்று செலுத்தப்பட்ட 2 செயற்கைகோள்களை போல வருங்காலத்தில் பல அறிவியல் நிகழ்வுகளை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்த இந்தியப் பேரரசர்!
இந்திய பூட்டான் கூட்டமைப்பு:
2019 இல் இந்திய- பூட்டான் இடையே விண்வெளி அறிவியல் துறையில் வளர்ச்சி பெறுவதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி கிரவுண்ட் ஸ்டேஷன்கள் அமைத்து செயல்படுத்த இந்தியா பூட்டானுக்கு உதவியுள்ளது. அதோடு, பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் செயற்கைகோள்கள் செய்வது கற்றுத்தரப்பட்டு , இந்தியா உதவியோடு 2 சிறிய ரக செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளனர்.
புவிசார் படங்கள் எடுக்கும் இமேஜிங் செயற்கைகோள் ஒன்றும், உள்ளூர் ரேடியோக்களுக்கு ரிப்பீட்டராக வேலை செய்யும் ஒரு நானோ செயற்கைக்கோளையும் உருவாக்கி இன்று விண்ணில் செலுத்தியுள்ளனர்.
இந்த ஏவும் பணியை பார்ப்பதற்காக பூட்டானின் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் கர்மா டோனன் வாங்கடி ஸ்ரீஹரிகோட்டா வந்துள்ளார். செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து இந்தியர்களுக்கும், இஸ்ரோ குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பல அறிவுசார் பரிமாற்றங்களை விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: External Minister jaishankar, ISRO