Home /News /technology /

பிரீமியம் வாக்யூம் கிளீனரானSamsung Jet 90 டிவைஸின் சாதகம், பாதகம் என்ன?

பிரீமியம் வாக்யூம் கிளீனரானSamsung Jet 90 டிவைஸின் சாதகம், பாதகம் என்ன?

சாம்சங் வாக்யூம் கிளீனர்

சாம்சங் வாக்யூம் கிளீனர்

Samsung Jet 90 Cordless Stick Vacuum Cleaner | நீங்கள் பிரீமியம் வாக்யூம் கிளீனர்களை வாங்க விரும்பினால் இந்த புதிய Samsung Jet 90 சிறந்த தேர்வாக இருக்கும். முன்னர் குறிப்பிடப்படி டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி நம்மை ஈர்க்கும் ஒன்றாக இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் வாக்யூம் கிளீனர் செக்மென்ட்டில் பேட்டரி மூலம் இயங்கும் ஜெட் 70, ஜெட் 75 மற்றும் ஜெட் 90 என்ற புதிய 3 கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர்களை அறிமுகப்படுத்தியது. இதில் ரூ.52,990 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெட் 90 கார்ட்லெஸ் ஸ்டிக் வாக்யூம் கிளீனர் பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்த வாக்யூம் கிளீனர் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஷாப் மற்றும் ஃபிளிப்காரட்டில் கிடைக்கிறது. பல வீடுகளில் வாக்யூம் கிளீனர்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவை பெட்டிகளில் அப்படியே உறங்க வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு சில முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் வாக்யூம் கிளீனர்கள் சற்று பெரிய சாதனமாக இருப்பது தான். இந்த கண்ணோட்டத்தை ஜெட் 90 கார்ட்லெஸ் ஸ்டிக் வாக்யூம் கிளீனரின் டிசைன் மூலம் மாற்ற முயற்சித்துள்ளது சாம்சங்.

இந்த வாக்யூம் கிளீனரை அன்பாக்ஸ் செய்தவுடன் நீங்கள் ஆச்சர்யம் கொள்வீர்கள். ஏனென்றால் இதன் அனைத்து அட்டாச்மென்ட்ஸ் மற்றும் காம்போனெண்ட்ஸ்களையும் 'Z Station' ஸ்டாண்டிங் சார்ஜர் எனப்படும் சிங்கிள் ஃபிரேமில் ஃபிக்ஸ் செய்ய முடியும். எனவே இந்த சாதனம் வீட்டை அடைக்கும் வகையில் அதிக இடத்தை எடுக்காது. Z Station ஐடியா என்பது மிகவும் சிம்பிளானது. இதை சார்ஜிங் சாக்கெட்டிற்கு அருகில் வைத்து விட்டால் இதில் வாக்யூம் கிளீனரை சார்ஜ் செய்து கொள்ளலாம். எப்போது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போது வீட்டின் மூலையில் Z Station-ல் வைக்கப்பட்டுள்ள வாக்யூம் கிளீனரில் தேவைப்படும் அட்டாச்மென்டை ஃபிக்ஸ் செய்து சுத்தம் செய்ய தொடங்கலாம்.இதன் பில்ட் குவாலிட்டி மற்றொரு சிறப்பம்சம். இந்த வாக்யூம் கிளீனரை ஹை குவாலிட்டி மெட்டெரியல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு அட்டாச்மென்ட்டும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விலைக்கேற்ற தரமான பொருளாக இருக்கிறது. சாம்சங்கின் இந்த புதிய ஜெட் வாக்யூம் கிளீனர்கள் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் மற்றும் ஜெட் சைக்ளோன் சிஸ்டமுடன் வருகின்றன. இதிலிருக்கும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் ஒரு அல்ட்ராசோனிக் வெல்டட் கவர் மற்றும் டிஃப்பியூசரைப் பயன்படுத்துகிறது. இது காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே இந்த டிவைஸ் லைட் வெயிட்டாக இருந்தாலும் அதிக உறிஞ்சும் சக்தியை கொண்டு வீட்டை தூசுக்களில் இருந்து பாதுகாக்கிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் டிடாச்சபிள் பிரஷ் மற்றும் டஸ்ட்பின்னை எவ்வித சிக்கலும் இன்றி முழுமையாக வாஷ் செய்ய முடியும். டஸ்ட்பினை சிரமமின்றி அகற்றலாம் என்பதால் தூசியை அகற்றிவிட்டு அனைத்து தனித்தனி பாகங்களையும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

Also Read : அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. தோசை பிரிண்ட் செய்யும் இயந்திரம் தெரியுமா மக்களே.!

குறைபாடுகள்:

சாம்சங் சின்ஹா வாக்யூம் கிளீனரை முழு சார்ஜில் ஒரு மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்று கூறினாலும், உண்மையில் ஹை ஸ்பீட் சக்ஷனில் இதை பயன்படுத்தினால் சுமார் 30 நிமிடங்கள் வரை தான் பயன்படுத்த முடிகிறது. சார்ஜிங் ஸ்டேஷன் மற்றொரு ஸ்பேர் பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் வருகிறது. எனினும் இதற்கான ஸ்பேர் பேட்டரியை தனியாக பணம் செலவழித்து வாங்க வேண்டும். அதே போல இந்த டிவைஸை சார்ஜாகும் போது பயன்படுத்த முடியாது என்பதால் கிளீனிங் செய்யும் போது இடையில் பேட்டரி தீர்ந்து விட்டால் மீண்டும் முழுவதும் பேட்டரி சார்ஜ் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்பு நேரம் சுமார் மூன்றரை மணிநேரம் என்பதும் மைனஸாக உள்ளது.

Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்

நீங்கள் பிரீமியம் வாக்யூம் கிளீனர்களை வாங்க விரும்பினால் இந்த புதிய Samsung Jet 90 சிறந்த தேர்வாக இருக்கும். முன்னர் குறிப்பிடப்படி டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி நம்மை ஈர்க்கும் ஒன்றாக இருக்கும். இந்த செயல்திறனும் அருமையாக இருக்கிறது என்பதே இதை பயன்படுத்தி பார்த்துள்ளவர்களின் விமர்சனமாக இருக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Samsung, Technology

அடுத்த செய்தி