• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • JioPhone Next: 13 மெகா பிக்சல் கேமரா... பிரகதி OS... ஜியோபோன் நெக்ஸ்ட்டின் முழு விவரம்

JioPhone Next: 13 மெகா பிக்சல் கேமரா... பிரகதி OS... ஜியோபோன் நெக்ஸ்ட்டின் முழு விவரம்

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட் மொபைலின் சில அம்சங்களையும் வீடியோவில் நிறுவனம் முன்னிலைப்படுத்தியது. (voice assistant), உரக்கப் படிக்கும் அம்சம் (Read Aloud feature), மொழியாக்க அம்சம், “ஈஸி அண்ட் ஸ்மார்ட்” கேமரா போன்ற பிற அம்சங்களும் இதில் அடங்கும்.

  • Share this:
    ஜியோபோன் நெக்ஸ்ட்  மொபைல் குறித்த 'Making of JioPhone Next’ என்னும் வீடியோவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொபைலின் கேமரா,  ஆப்ரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிக்கப்பட்டது.  இந்த மொபைல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ’Making of JioPhone Next’ என்ற பெயரில் ஜியோபோன் நெக்ஸ்ட் தொடர்பான வீடியோவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை பற்றிய சிறிய பார்வையை இந்த வீடியோ வழங்குகிறது.

    டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சம வாய்ப்பு மற்றும்  சம அணுகலை உறுதி செய்வதை ஜியோபோன் நெக்ஸ்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும், ண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படும் பிரகதி ஓஎஸ் -இல் (Pragati OS)ஜியோபோன் நெக்ஸ்ட் இயங்கும் என்பதையும் இந்த வீடியோ தெளிவுபடுத்தியுள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ  இந்த மொபைலில் குவால்காம் மொபைல் பிராஸசர் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது, பிராஸசர் சாதனத்தின் செயல்திறன், ஆடியோ மற்றும் பேட்டரியை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்டின் உயர்தர அம்சத் தொகுப்பு தொழில்நுட்பத்துடன் புதிய முறையில் தொடர்பு கொள்ள உதவும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

    ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட வீடியோவில், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களையும் நிறுவனம் முன்னிலைப்படுத்தியது. (voice assistant), உரக்கப் படிக்கும் அம்சம் (Read Aloud feature), மொழியாக்க அம்சம், “ஈஸி அண்ட் ஸ்மார்ட்” கேமரா போன்ற பிற அம்சங்களும் இதில் அடங்கும்.

    தனது மற்ற சேவைகளை போல ஜியோபோன் நெக்ஸ்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டது மற்றும் இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது என்பதை  வீடியோவில் ஜியோ நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. பிரகதி ஒஎஸ், குவால்காம் மொபைல் பிராஸசர் ஆகியவற்றின் உதவியால் நீடித்து நிலைக்கும் பேட்டரியையும் ஜியோபோன் நெஸ்ட் கொண்டுள்ளது.

    செப்டம்பரில், ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டு செய்திக்குறிப்பில்,  வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஜியோபோன் நெக்ஸ்டை சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும், தீபாவளிக்கு இது மிகவும் பரவலாக கிடைக்கச் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் முதல் ஸ்மார்ட்போனாக ஜியோபோன் நெக்ஸ்ட் வரவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: