Home » News » Technology » POLLACHI JEYARAMAN SAYS THERE IS NO CONNECTION BETWEEN ARULANANTHAM AND ME SUR

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுகவில்அருளாணந்தம் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் பொள்ளாசி ஜெயராமன்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்
  • Share this:
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என துணை சபாநாயரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.


இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பின் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளாணந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்சிகாரர் என்ற முறையில் கூட்டங்களுக்கு எங்கேயாவது அருளானந்தம் வந்திருக்கலாம் என்றும், அவரை நேற்று முன் தினம், தான் நேரில் பார்த்ததாகவும் கூறிய பொள்ளாசி ஜெயராமன், அதிமுகவில் அவர் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் மற்றபடி எந்த சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
First published: January 6, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading