உணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்!

மத ரீதியான நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதாக நொய்டா காவல் நிலையத்தில் சட்டவிதிமுறை இபிகோ 153A-ன் கீழ் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: May 18, 2019, 3:54 PM IST
உணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்!
அமேசான்
Web Desk | news18
Updated: May 18, 2019, 3:54 PM IST
அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் மத நம்பிக்கைகள், உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலான பொருட்களை விற்பதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானின் அமெரிக்க விற்பனைத் தளத்தில் ஹிந்து கடவுள்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள மிதியடி, டாய்லெட் கவர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நொய்டாவில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களிலும் பலர் ‘அமேசானை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அமேசானின் செய்தித்தொடர்பாளர் அளித்த விளக்கத்தில், ‘அமேசான் நிறுவனத்தின் விற்பனை விதிமுறைகளை விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவகாரத்துக்குள்ளான பொருட்களை அமேசான் தளத்திலிருந்து நீக்கியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மத ரீதியான நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதாக நொய்டா காவல் நிலையத்தில் சட்டவிதிமுறை இபிகோ 153A-ன் கீழ் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தான பல புகார்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி?
First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...