5,600 கோடி ரூபாய் சம்பாதித்த ‘போக்கிமான் கோ’!

2018-ல் ஒரு நாளில் போக்கிமான் கோ 14 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. ஆனால், இது குறைவு என்கிறது நியாண்டிக் நிறுவனம்.

Web Desk | news18
Updated: January 6, 2019, 12:18 PM IST
5,600 கோடி ரூபாய் சம்பாதித்த ‘போக்கிமான் கோ’!
போக்கிமான் கோ
Web Desk | news18
Updated: January 6, 2019, 12:18 PM IST
நியாண்டிக் நிறுவனம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்கிமான் கோ கேம் சுமார் 5600 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.

சர்வதேச அளவில் போக்கிமான் ரசிகர்களும் மொபைல் கேம்ஸ் ரசிகர்களும் இந்த ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுக்குப் பெரிய வரவேற்பு அளித்தார்கள்.

அறிமுகமானதிலிருந்து சற்றும் சருக்காமல் பல வளர்ச்சிகளைப் பெற்று வருகிறது போக்கிமான் கோ. 2017-ம் ஆண்டை விட 35 சதவிகிதம் அதிகப்படியான வருவாய் ஈட்டியுள்ளது போக்கிமான் கோ. அதாவது 5,600 கோடி ரூபாய் வருவாய்.

ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் போக்கிமான் கோ வருவாய் 2017-ம் ஆண்டில் 400 கோடி ரூபாய் ஆக இருந்தது. இதுவே 2018-ல் 530 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு நாள் வருவாய் குறித்தத் தகவலில் 2018-ல் ஒரு நாளில் போக்கிமான் கோ 14 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. ஆனால், இது குறைவு என்கிறது நியாண்டிக் நிறுவனம். காரணம், 2017-ல் ஒரு நாள் வருவாய் 112 கோடி ரூபாய் ஆக இருந்துள்ளது.

புதிய மோட் அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து போக்கிமான் கோ கேம்மில் ரசிகர்களை தக்கவைத்து வருவதாகக் கூறியுள்ளது நியாண்டிக்.

மேலும் பார்க்க: யாருக்கு பயம்? யாருக்கு தயக்கம்? தள்ளிப் போகிறதா திருவாரூர் தேர்தல்?
First published: January 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...