• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆரம்பமானது Poco M4 Pro 5G மொபைலின் லான்ச் ஈவென்ட்... என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்!

ஆரம்பமானது Poco M4 Pro 5G மொபைலின் லான்ச் ஈவென்ட்... என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்!

Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G

இந்த புதிய Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும் என்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் தகவல் வெளியானது.

  • Share this:
Poco M4 Pro 5G இன்று உலகளாவிய நிகழ்வில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்மார்ட்போன் இன்று இரவு 8PM GMT +8 மணிக்கு அதாவது இந்தியா நேரப்படி 5:30PM மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மொபைலின் லான்ச் ஈவென்ட் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் YouTube மற்றும் பிற சமூக ஊடக சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மொபைலின் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழ்காணும் லைவ் வீடியோவை காணலாம்.,

கடந்த வாரமே இந்த ஸ்மார்ட்போன் குறித்து டீஸர் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும், மொபைலின் அம்சங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள் குறித்தும் சில தகவல் கசிந்தன. அதில் இந்த அமர்ட்போன் 50 மெகாபிக்சல் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பலவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது. Poco M4 5G ஆனது ரெட்மி நோட் 11 5G போன்ற சாதனமாக இருக்கும் என்றும், உலகளவில் ஒரே வரம்பில் இதன் விலை இருக்கலாம் என்றும் அறிக்கைகள் மூலம் தகவல் வெளியாகின.

அதாவது, ரெட்மி நோட் 11 5ஜியின் சீன விலை நிர்ணயம் போலவே, அதே வரம்பில் Poco M4 Pro 5G ஸ்மார்ட்போனின் விலையும் நிர்ணயம் செய்யப்படலாம். சீனாவில் Redmi Note 11 5G ஸ்மார்ட்போனின் விலை 1,199 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 14,000 விலையில் இது தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த புதிய Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும் என்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் தகவல் வெளியானது. . Poco M4 Pro 5G ஆனது 90Hz டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் 6nm சிப்பை அடிப்படையாகக் கொண்ட “அல்ட்ரா ஃபாஸ்ட்” செயலி மூலம் இயக்கப்படும்.

Also read... ஆயிரக்கணக்கான சென்சிடிவ் விளம்பர-இலக்கு விருப்பங்களை நீக்க முடிவு: பேஸ்புக் அறிவிப்பு!

ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. தவிர, பல அம்சங்களுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. தவிர, 6.6-இன்ச் முழு-எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வரலாம். Poco M4 Pro ஆனது 4GB + 128GB, 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஆகிய மூன்று ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுகளுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: