• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Poco M3 Pro 5ஜி ஸ்மார்ட் ஃபோனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Poco M3 Pro 5ஜி ஸ்மார்ட் ஃபோனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Poco M3 Pro 5ஜி

Poco M3 Pro 5ஜி

வரவிருக்கும் POCO M3 Pro ஸ்மார்ட் போன் ஒரு தனித்துவமான வடிவமைப்போடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
போக்கோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் ஃபோனான போக்கோ எம்3 ப்ரோ (Poco M3 Pro 5G) மாடலின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள போக்கோ நிறுவனம் வரும் 19-ம் தேதி (மே 19), Poco M3 Pro 5G ஸ்மார்ட் ஃபோன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. வரவிருக்கும் POCO M3 Pro ஸ்மார்ட் போன் ஒரு தனித்துவமான வடிவமைப்போடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் POCO பிராண்ட் சியோமியின் நிழலில் இருந்து விலகி செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த Poco M3 Pro மொபைல் உயர் திரை புதுப்பிப்பு வீதம் (high screen refresh rate) மற்றும் மீடியா டெக் சிப்செட் உடன் வரும் என்று போக்கோ நிறுவனம் கூறியுள்ளது, இது மீடியா டெக் டைமன்சிட்டி 700 (MediaTek Dimensity 700 - அதிக சக்தி மற்றும் அதிக திறன் கொண்ட 7nm உயர் செயல்திறன் பிராசஸர் ) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மே 19-ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் :

POCO பிராண்ட் சியோமி நிழலில் இருந்து விளக்க விரும்புவதாக கூறப்பட்டாலும், Poco M3 Pro மறுபெயரிடப்பட்ட ரெட்மி நோட் 10 5 ஜி ஆக இருக்க கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால், இந்த சாதனம் 6.5 இன்ச் FHD-1080x2400 pixels + LCD டிஸ்ப்ளேவுடன் 1100 நைட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வர கூடும். இந்த சாதனம் பஞ்ச்-ஹோல் கேமரா மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்திற்கான சப்போர்ட்டை கொண்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் Mali-G57 MC2 GPU-வுடன் இணைந்து இருக்கும் MediaTek Dimensity 700 SoC ப்ராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு தேவைப்பட்டால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை மேலும் விரிவாக்கி கொள்ள கூடிய வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி Android 11- அடிப்படையிலான MIUI 12 -ல் இயங்கும். மேலும் Poco M3 Pro மொபைல் 6,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்பதையும், பாக்ஸில் சேர்க்கப்பட்டுள்ள சார்ஜருடன் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரும் என்பதையும் Poco நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Also read... Bynge App: எழுத்தாளர்களின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களுடன் விவாதிக்கலாம்!

மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் 48MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்களுக்கான 8MP முன்பக்க கேமராவையும், பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் சென்சாரையும் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் பெரும்பாலும் IR பிளாஸ்டருடன் வரும் மற்றும் ஹை-ரெஸல்யுஷன் ஆடியோவை கொண்டிருக்கும்.

கனெக்ட்டிவிட்டி அம்சங்களில் 5 ஜி, டூயல்-பேண்ட் 4 ஜி, (dual-band 4G) டூயல்-பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜிங் USB Type-C port மற்றும் டேட்டா ட்ரான்ஸ்ஃபர்களும் அடங்கும். மே 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டாலும் Poco M3 Pro ஸ்மார்ட் ஃபோன் இந்திய சந்தைக்கு எப்போது வரும் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: