Home /News /technology /

போக்கோ M3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.800 வாங்க வேண்டுமா? இதோ சூப்பர் வழி இருக்கு!

போக்கோ M3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.800 வாங்க வேண்டுமா? இதோ சூப்பர் வழி இருக்கு!

போக்கோ M3 ப்ரோ 5ஜி

போக்கோ M3 ப்ரோ 5ஜி

நீங்கள் போக்கோ M3 ப்ரோ 5ஜி மொபைலை 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் வாங்க விரும்பினால் இதற்கு பிளிப்கார்ட் தளத்தில் 13% தள்ளுபடி உள்ளது.

    பொதுவாக நாம் வாங்குகின்ற எந்த வகையான பொருட்களுக்கும் தள்ளுபடி தந்தார்கள் என்றால், மிக மகிழ்ச்சியுடன் அந்த பொருளை வாங்கி கொள்வோம். சாதாரண கடையில் வாங்கினாலோ அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்தாலும் இந்த வகையான தள்ளுபடி அந்த பொருட்களை வாங்குவோரை மகிழ்ச்சிப்படுத்தி விடும்.

    சமீப காலமாக பல பொருட்களை தள்ளுபடியில் தந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான தள்ளுபடிகள் உள்ளது. இதே போன்ற சூப்பர் தள்ளுப்படி ஒன்று தான் தற்போது வந்துள்ளது. போக்கோ M3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் 800 ரூபாயில் வாங்கி கொள்ள முடியும். இதுதான் இந்த அதிரடி ஆஃபர். இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    போக்கோ M3 ப்ரோ 5ஜி :

    இந்த போக்கோ M3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் உடன் வாங்க விரும்பினால் சிறப்பு தள்ளுபடியில் பல உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.15,999 ஆக உள்ளது. இதை 15% தள்ளுபடியில் ரூ.13,499-க்கு பெற்று விடலாம்.மேலும் இதே போன்ற பல தள்ளுபடிகளும் உண்டு. பிளிப்கார்ட் தளத்தில் உங்களின் பழைய ஐபோனை எக்ஸ்ஜேன்ச் செய்து ரூ.799க்கு போக்கோ M3 ப்ரோ மொபைலை பெற்று கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி ஒவ்வொரு மொபைல் மாடலுக்கு மாறுபடும்.

    பேங்க் ஆஃபர்:

    நீங்கள் உங்களின் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த போக்கோ M3 ப்ரோ 5ஜி மொபைலை 5% ஆன்லிமிடேட் கேஷ்பேக் உடன் பெற்று கொள்ளலாம். இதற்கு முன் இதில் தரப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்றாக படித்துவிட்டு வாங்குங்கள். மேலும் 25% டிஸ்கவரி+ சப்ஸ்கிரிப்ஷனில் தள்ளுபடி பெறலாம். இத்துடன் ZebPay மூலம் ரூ.100 கேஷ்பேக் பெறலாம் மற்றும் ரூ.500 கேஷ் போனஸும் கிடைக்கும். இதுவும் இந்த சிறப்பு தள்ளுபடியில் அடங்கும்.

    Also read... ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை இரண்டு ஃபோன்களில் பயன்படுத்த விருப்பமா? இதைச் செய்தால் போதுமானது

    மற்ற வேரியண்ட் மாடல்கள் :

    நீங்கள் போக்கோ M3 ப்ரோ 5ஜி மொபைலை 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் வாங்க விரும்பினால் இதற்கு பிளிப்கார்ட் தளத்தில் 13% தள்ளுபடி உள்ளது. அதாவது, இதன் ஆரம்ப விலையான ரூ.17,999-இல் இருந்து ரூ.15,499-க்கு நீங்கள் பெற்று கொள்ளலாம். 13% தள்ளுபடியாக ரூ.2500 நீங்கள் மிச்சப்படுத்தலாம். இதற்கு மேலும் அதிக தள்ளுபடியை நீங்கள் பெற சில வழிகள் உண்டு. இந்த வேரியண்ட்டை ரூ.14,800-க்கும் நீங்கள் பெற்று விடலாம். இதற்கு நீங்கள் உங்கள் பழைய மொபைலை எக்ஸ்ஜேன்ச் செய்து பெற்று கொள்ளலாம். அடுத்து சில பேங்க் ஆஃபர்கள் மூலமும் குறைந்த விலையில் பெறலாம்.

    போக்கோ M3 ப்ரோ 5ஜி மொபைலை மேற்சொன்ன வழிகளை பயன்படுத்தி சிறந்த தள்ளுபடியில் வாங்குவதற்கு வாழ்த்துக்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Technology

    அடுத்த செய்தி