இந்தியாவில் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் Xiaomi Poco M3 - விலை எவ்வளவு தெரியுமா?

Poco M3

இந்தியாவில் போகோ எம்3-ன் விலை ரூ.9,999-ல் தொடங்கி ரூ.13,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் அதிகாரப்பூர்வ விலை பிப்ரவரி 2 ம் தேதி அன்று நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும்.

  • Share this:
புதிய Poco M3 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 2ம் தேதி இந்தியாவில் வெளியிட Xiaomi நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் வெளியீட்டிற்கு முன்னதாக, அந்நிறுவனம் தனது சமூக ஊடகங்கள் மற்றும் பிளிப்கார்ட் வழியாக Poco M3 குறித்த விவரக்குறிப்புகளை பற்றி அறிவித்து வருகிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிப்.2 தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் Poco M3-ன் விலை மற்றும் அதன் வெளியீட்டு நிகழ்வை எங்கே பார்ப்பது? போன்ற விவரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன்லைனில் நிகழ்வு மூலம் பிப்.2ம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். Poco M3 போனின் வெளியீட்டு நிகழ்வு யூடியூப், பிளிப்கார்ட் அல்லது போகோ இந்தியாவின் சமூக ஊடகங்கள் வழியாக நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Xiaomi Poco M3-ன் விலை:

Xiaomi Poco M3-ன் விலை ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 6GB RAM வேரியண்ட் இருக்கும் என்று Xiaomi நிறுவனம் பிளிப்கார்ட் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் இதன் ஆரம்ப விலை 149 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய விலையில் தோராயமாக ரூ.11,000 இருக்கும். எனவே இந்தியாவில் போகோ எம்3-ன் விலை ரூ.9,999-ல் தொடங்கி ரூ.13,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் அதிகாரப்பூர்வ விலை பிப்ரவரி 2 ம் தேதி அன்று நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும். Poco M3 உலகளவில் கூல் ப்ளூ, போக்கோ எல்லோ மற்றும் பவர் பிளாக் என 3 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Poco M3


Poco M3-ன் அம்சங்கள்:

Poco M3 ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC ஐ 6 ஜிபி ரேம் உடன் வருகிறது. மேலும் 6000 mAh பேட்டரியை 18W வேகமான சார்ஜிங் உடன் சப்போர்ட் செய்கிறது. Poco M3 6.5 இன்ச் எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி பேனலில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் கொரில்லா கிளாஸ் 3-ஐயும் கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்காக இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் ஷூட்டர் கேமரா உள்ளது. அது எஃப் / 2.05 லென்ஸைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், Poco M3 ஒரு பெரிய ஐலண்ட் ஷேப் கேமரா லேஅவுட்டுடன் மூன்று கேமரா அமைப்பைப் பெறுகிறது.

இந்த அமைப்பில் 48 எம்.பி முதன்மை சென்சார், 2 எம்.பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. Poco M3 ஆண்ட்ராய்டு 10 இல் MIUI 12 ஸ்கின் மற்றும் போக்கோ லாஞ்சருடன் இயங்குகிறது. இது விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பெறும். தொலைபேசியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ரீடர் ஆகியவை உள்ளன. பின்புறத்தில் உள்ள ஆன்டி பிங்கர் பிரிண்ட், கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் ஒளிரும் போகோ எல்லோ உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் வருகிறது.

நெட்வொர்க் இணைப்பை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் இன்ப்ரா ரெட் (ஐஆர்) பிளாஸ்டர் ஆகியவை உள்ளன. ஸ்டோரேஜை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கக்கூடிய ஒரு பிரத்யேக ஸ்லாட் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களை போக்கோ வழங்கியுள்ளது.
Published by:Arun
First published: