அட்டகாசமான அம்சத்துடன் போகோ M3 ஸ்மார்ட்போன் அறிமுகம் - பிளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கியது!

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் போகோ M3 (இரண்டு மாடல்களுக்கும்) ரூ. 1000 உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இது EMI பரிவர்த்தனைகளிலும் செல்லுபடியாகும்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் போகோ M3 (இரண்டு மாடல்களுக்கும்) ரூ. 1000 உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இது EMI பரிவர்த்தனைகளிலும் செல்லுபடியாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
போகோ M3 (POCO M3) என்பது சியோமி ஸ்பின்-ஆஃப் பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். போகோ M3 கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. போகோ M3 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் இன்று மதியம் (பிப்., 9) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது 6.53 அங்குல முழு எச்டி + (1,080×2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் அம்சத்தை கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. 

இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.79 லென்ஸ்,  எஃப் / 2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ எடுக்க முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை எஃப் / 2.05 லென்ஸுடன் கொண்டுள்ளது. போகோ M3 போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வேரியன்டுகளில் கிடைக்கிறது.மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரிக்கலாம். 

Also read... ரூ.30,000க்கு குறைவான Dual முன்பக்க கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு (ஐஆர்) பிளாஸ்டர், யூ.எஸ்.பி டைப்-சி  மற்றும் கைரேகை சென்சார் உள்ளது. 6WmAh பேட்டரி பவரும், 18W வேகமான சார்ஜிங் ஆதரவும் உள்ளது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 198 கிராம் எடையில் உள்ளது. போகோ M3 பிளிப்கார்ட்டில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .10,999 மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .11,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் போகோ M3 (இரண்டு மாடல்களுக்கும்) ரூ. 1000 உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இது EMI பரிவர்த்தனைகளிலும் செல்லுபடியாகும். ஐசிஐசிஐ சலுகையை தவிர, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களும் 5 சதவீத அன்லிமிட்டேட் கேஷ்பேக்கை பெற முடியும். பேங்க் ஆப் பரோடா மாஸ்டர்கார்டு டெபிட் கார்டை பயன்படுத்தி பிளிப்கார்ட்டில் முதல் முறையாக பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உள்ளது. இந்த சலுகை போகோ எம் 3 ஸ்மார்ட்போனுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளனர். போகோ M3 ஸ்மார்ட்போனானது கூல் ப்ளூ (Cool Blue) , போக்கோ எல்லோ (Poco Yellow) மற்றும் பவர் பிளாக் (Power Black) ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: