செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் - பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகத்துக்கான உற்பத்திமையமாக இந்தியா இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
சமூக முன்னேற்றத்துக்கான பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு 2020 உச்சி மாநாட்டைபிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் அறிவாற்றலுக்கான சமர்ப்பணம். சிந்திப்பதற்கும், மனிதர்கள் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க உதவும். தற்போது அந்த கருவிகள் சிந்திப்பதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளன. வரலாற்றின் எல்லாப் படிநிலைகளிலும் அறிவிலும் கற்றுக்கொள்வதிலும் இந்தியா உலகத்துக்கு தலைமைதாங்கியுள்ளது. இன்றைய தகவல்தொழில்நுட்ப காலத்தில் இந்தியா மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துவருகிறது. தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மை அதிகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவில் உலகத்துக்கான உற்பத்திமையம் இந்தியா இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கற்றுக்கொள்பவர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுக்கான தேசியத் திட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சரியான வகையில் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். மனித வள ஆவணங்கள், வணிகம் மற்றும் அரசாங்கத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த அனைத்தும் அடுத்த தலைமுறை நகர்புற கட்டமைப்பு மற்றும் நகர்புற வாழ்க்கைமுறையை முன்னேற்றும். அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது என்பது கடமை. மனிதர்களுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவின் கூட்டு முயற்சி இந்த கிரகத்தில் அதிசயத்தை உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.
First published: October 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading