கூகுளின் ஸ்ட்ரீட் வியூ.. நம்ம சென்னைக்கு வந்துடுச்சு.. செக் பண்ணி பாருங்க
கூகுளின் ஸ்ட்ரீட் வியூ.. நம்ம சென்னைக்கு வந்துடுச்சு.. செக் பண்ணி பாருங்க
கூகுள் ஸ்ட்ரீட் வ்யூ
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த கூகுள் முயன்றபோது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மத்திய அரசு அப்போது அனுமதி தர மறுத்து விட்டது.
பல கட்ட போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக கூகுளின் ஸ்ட்ரீட் வியூ வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்னை, பெங்களுரு, டில்லி, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலமாக பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளும் பயனர்கள், இந்த ஸ்ட்ரீட் வியூ வசதியின் மூலம் ஒவ்வொரு தெருவையும், அங்குள்ள முக்கியமான இடங்களையும் நேரடியாகப் பார்ப்பது போல 360 டிகிரி கோணத்தி்ல் காண முடியும். பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வசதி தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த கூகுள் முயன்றது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மத்திய அரசு அப்போது அனுமதி தர மறுத்து விட்டது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒவ்வொரு தெருவையும் "இன்ச் இன்ச் ஆக" புகைப்படம் எடுப்பது, பாதுகாப்பு தொடர்பான சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிற அச்சத்தின் அடிப்படையில் அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய நிறுவனங்களான டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புதிய தேசிய இடம் சார்ந்த தரவு கொள்கை 2021ன் படி, இந்திய நிறுவனங்கள் ஸ்ட்ரீட் வியூ வசதிக்கான தரவுகளை சேமிக்கலாம்; வெளிநாட்டு நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெற்று அதனை பயன்படுத்தலாம் என்பதால் இந்தியாவுக்கு வந்துள்ளது ஸ்ட்ரீட் வியூ. இதற்காக இந்தியாவின் 10 முக்கிய நகரங்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் லட்சக்கணக்கான புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 இந்திய நகரங்களுக்கு இந்த வசதியை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தெருக்களில் நடக்கும்போதே ஸ்மார்ட்ஃபோன் பார்த்துக் கொண்டே நடப்பவர்கள், இனி தெருக்களையும் ஸ்மார்ட்ஃபோனில் பார்க்கலாம் என்கிறது ஸ்ட்ரீட் வியூ.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.