• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Pinterest: எடை இழப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் படங்களையும் நீக்கிய Pinterest தளம்!

Pinterest: எடை இழப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் படங்களையும் நீக்கிய Pinterest தளம்!

Pinterest

Pinterest

ஏராளமானோர் தங்கள் அதிகரித்த உடல் எடையை குறைக்க ஜிம்கள், மற்றும் எடை இழப்பு தயரிப்புகளை தேடி வரும் இந்த சமயத்தில், Pinterest நிறுவனம் தனது தொழில்நுட்ப தளத்தில் உள்ள அனைத்து எடை இழப்பு விளம்பரங்களையும் தடை செய்துள்ளது.

  • Share this:
தொற்றுநோய் ஆரம்பமான காலம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்ததால் பல கடைகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் வீட்டில் இருந்து வேலை என்ற நடைமுறை உருவானதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் காரணமாக பலர் உடல் பருமன் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க தொடங்கியதில் இருந்து, மக்கள் நடமாட்டம் அனைத்து நகரங்களிலும் அதிகரிக்க தொடங்கியது.

மேலும், பல மாதங்களாக மூடியிருந்த ஜிம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்க ஆரம்பித்துள்ளன. எனவே, ஏராளமானோர் தங்கள் அதிகரித்த உடல் எடையை குறைக்க ஜிம்கள், மற்றும் எடை இழப்பு தயரிப்புகளை தேடி வரும் இந்த சமயத்தில், Pinterest நிறுவனம் தனது தொழில்நுட்ப தளத்தில் உள்ள அனைத்து எடை இழப்பு விளம்பரங்களையும் தடை செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "உலகெங்கிலும் உள்ள அனைத்து வயது மக்களும் உடல் உருவம் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக கொரோனா தொற்றுநோயிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க முடியாது. அதேபோல எடை இழப்பு குறித்த அதிகரித்த கவலையும் அவர்களில் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாகேவ கடந்த வியாழக்கிழமை முதல், எடை இழப்புடன் தொடர்புடைய மொழி வாக்கியங்கள் மற்றும் படங்கள் இடம்பெறும் அனைத்து விளம்பரங்களையும் தடை செய்து Pinterest தனது விளம்பரக் கொள்கைகளைப் புதுப்பித்துள்ளது. இதுபோன்ற எடை இழப்பு விளம்பரங்களை தடைசெய்யும் முதல் பெரிய தொழில்நுட்ப தளம் இந்த நிறுவனம் தான்.

இந்த புதிய கொள்கை புதுப்பிப்பின்படி, Pinterest இப்போது எடை இழப்பு அல்லது எடை கூடும் தயாரிப்புகள் பற்றிய சான்றுகள் அல்லது விளம்பரங்கள் மற்றும் "சில உடல் வகைகளை பெறுவது அல்லது குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்" வாக்கியங்கள் மற்றும் படங்களை தடை செய்துள்ளது. அதேபோல பாடி மாஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) குறிப்பிடும் விளம்பரங்களுக்கும், சருமத்தில் ஏதாவது ஒன்றை அணிவதன் மூலமோ அல்லது பயன்படுத்துவதன் மூலமோ மக்கள் எடை இழக்க நேரிடும் என்று கூறும் தயாரிப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும்.

இந்த கொள்கை மாற்றம் குறித்து தேசிய உணவுக் கோளாறுகள் சங்கம் Pinterest-க்கு அறிவுறுத்தியதன் பிரதிபலிப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி எலிசபெத் தாம்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, " Pinner-களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட அவசியமான நடவடிக்கையால் NEDA ஊக்குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு கலாச்சாரம், பாடி ஷேமிங் மற்றும் உணவுக் கோளாறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, "இந்த உலகளாவிய கொள்கை மூலம் பிற நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் விளம்பர செய்திகளைப் பிரதிபலிக்க கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த செயல்பாட்டுக் கொள்கைகளை நிறுவலாம் என்று நாங்கள் நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த தடை அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்னவென்றால் கடந்த ஆண்டு Pinterest யூசர்கள் தங்கள் உடல் எடையை அப்படியே ஏற்றுக்கொள்வது எப்படி என்ற ஒரு விருப்பத்தால் வந்தது.

Also read... Vi-ன் ரூ.267 ப்ரீப்பெய்ட் பிளான் - இவ்வளவு ஆஃபர்களா?

"பாடி நியூட்ராலிட்டி" மற்றும் "ஸ்டாப் பாடி ஷேமிங் மேற்கோள்கள்" ஆகியவற்றிற்கான Pinterest தேடல்கள் கடந்த ஆண்டில் 5 மடங்கு உயர்ந்தன என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் உடலை இருக்கும்படியே ஏற்றுக்கொள்ளும் மேற்கோள்களை யூசர்கள் மே 2020-ஐ விட கடந்த மே மாதத்தில் 7 மடங்கு அதிகமாகத் தேடியுள்ளனர். மேலும் "சுய-காதல் விளக்கக் கலை" க்கான தேடல்கள் அதே காலகட்டத்தில் 63 மடங்கு அதிகரித்திருந்தது.

எடை இழப்பில் கவனம் செலுத்தாத வரை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் அல்லது உடற்பயிற்சி சேவைகள் மற்றும் ஆரோக்கியமான தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களை நிறுவனம் அனுமதிக்கும் என்று Pinterest கூறியுள்ளது. தடையுடன் அதற்கான விதிமுறைகளை பின்பற்றுமாறு நிறுவனம் தனது சகாக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "தொழில்துறையில் உள்ள மற்ற நிறுவனங்களும் இதைச் செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிக்டாக் நிறுவனம் எடை அதிகரித்தல் மற்றும் குறைத்தல், உண்ணாவிரத பயன்பாடுகளுக்கு தடை விதித்தது. 2019 ஆம் ஆண்டில், இன்ஸ்டாகிராம் எடை இழப்பு தயாரிப்புகள் அல்லது ஒப்பனை அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கும் பதிவுக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதன் மூலம் சிறுவர் சிறுமியர்கள் வழிமாறி போகாமல் தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: