ஏடிஎம் சேவையில் களமிறங்கும் ஃபோன்பே...!

ஏடிஎம் சேவையில் களமிறங்கும் ஃபோன்பே...!
  • News18
  • Last Updated: February 9, 2020, 10:44 AM IST
  • Share this:
டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்கிவரும் ஃபோன்பே ஏடிஎம் சேவையையும் வழங்கயிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 லட்சம் ஏடிஎம் நெட்வொர்க்கை உருவாக்க உள்ளதாக போன்பே நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் போன்பே சேவையை பயன்படுத்தும் வணிகரிடம் சென்று செயலி மூலம் பணத்தை அனுப்பி விட்டு அவரிடம் இருந்து அதற்கு ஈடான தொகையை ரொக்கமாகப் பெற முடியும்.

இதற்குக் கூடுதல் கட்டணம் தேவையில்லை. மேலும், ஒருநாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது அவரவர் பயன்படுத்தும் வங்கி விதிமுறையைப் பொறுத்தது.


ஏடிஎம்களில் பெரும்பாலான நேரம் பணம் இல்லாமல் இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக போன்பே இந்த நடைமுறையை செயல்படுத்த உள்ளது. பே-டிஎம், அமேசான் பே, கூகுள் பே போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களில் இந்த சேவை இல்லாத நிலையில், அவற்றுக்குப் போட்டி போடும் வகையில் இந்தச் சேவையை ஃபோன்பே ஆரம்பிக்கிறது.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்