இனி Paytm ஆப் மூலமும் உணவு ஆர்டர் செய்யலாம்..!

100 நகரங்களைச் சேர்ந்த 80ஆயிரம் உணவகங்கள் உடன் Paytm இணைந்து இந்த உணவு ஆர்டர் சேவையைக் கொண்டு வர உள்ளது.

Web Desk | news18
Updated: January 17, 2019, 5:37 PM IST
இனி Paytm ஆப் மூலமும் உணவு ஆர்டர் செய்யலாம்..!
paytm (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: January 17, 2019, 5:37 PM IST
Paytm ஆப் மூலம் இனி உணவுகளும் ஆர்டர் செய்து கொள்ளலாம் என Paytm நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ஜொமேட்டோ உடன் இணைந்து Paytm இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் Paytm ஆப் மூலம் இந்த உணவு சேவை முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. சோதனைக்காக முதலாவதாக டெல்லியில் மட்டும் இந்த உணவு ஆர்டர், டெலிவரி சேவையை Paytm கொண்டு வந்துள்ளது. விரைவில் நாடு முழுவதிலும் இத்திட்டத்தைக் கொண்டு வர Paytm முயற்சி எடுத்து வருகிறது.

ஜொமேட்டோ நிறுவனமும் புதிய முயற்சியாகக் கூடுதலாக 30 நகரங்களில் இந்த உணவு ஆர்டர் சேவையை விரிவு செய்கிறது. இம்மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள 100 நகரங்களைச் சேர்ந்த 80ஆயிரம் உணவகங்கள் உடன் Paytm இணைந்து இந்த உணவு ஆர்டர் சேவையைக் கொண்டு வர உள்ளது.

தொடக்க விழா ஆஃபராக Paytm மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கான கேஷ்பேக் ஆஃபர் உள்ளது.

மேலும் பார்க்க: காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு
First published: January 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...