முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / பயனாளர்களின் தரவுகள் திருட்டு சர்ச்சையில் சிக்கிய Paytm - உண்மை என்ன?

பயனாளர்களின் தரவுகள் திருட்டு சர்ச்சையில் சிக்கிய Paytm - உண்மை என்ன?

பேடிஎம்

பேடிஎம்

Have I Been Pwned என்கிற தளம் மூலம் உங்களுடைய தரவு பற்றித் தெரிந்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலவித சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் தனிநபர் தரவுகள் என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களான டிவிட்டர், முகநூல் போன்றவற்றிலிருந்து கூட ஏராளமான தனிநபர் தரவுகள் வெளியாகி உள்ளன. இதே போன்று தற்போது பேடிஎம் மாலின் யூசர்களின் தரவுகள் வெளியாகி உள்ளதாக மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பயர்பாக்ஸ் மானிட்டர், பேடிஎம் மால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய தரவு மீறலைச் சந்தித்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, 3.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவை வெளியாகி உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், இது குறித்து பேடிஎம் நிறுவனத்திடம் கேட்டபோது அதன் பயனர்களின் தரவுகள் "முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது" என்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் தலைவர் தெரிவித்தார். மேலும், பேடிஎம் மால் செய்தித் தொடர்பாளர் இது குறித்து மேலும் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். அதில், "எங்கள் யூசர்களின் தரவுகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது" மற்றும் "2020 ஆம் ஆண்டில் தரவு கசிவு தொடர்பான கூற்றுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்றும் கூறியுள்ளார்.

Also Read:கழிவுநீரை சுத்தகரிக்கும் தொழில்நுட்பம்.. ஐஐடி மும்பையோடு இணையும் பிரஹன்மும்பை

haibeenpwned.com என்கிற தளத்தில் டம்ப் பயர்பாக்ஸ் பிரவுசரின் மூலம் பதிவேற்றப்பட்ட தரவுகள் போலியானது போல் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது குறித்து பயர்பாக்ஸ் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு இது குறித்த விவரங்களைப் பெறுகிறோம்" என்று பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். பிரபலமான இணைய பிரவுசரான மொஸில்லாவின் பாதுகாப்பு கண்காணிப்பாளரான பயர்பாக்ஸ் மானிடர்-இன் படி, “பேடிஎம் மாலின் கசிவான தரவுகள் ஆகஸ்ட் 30, 2020 என்று அறியப்பட்டது என்றும், இந்த தரவுகளைக் கண்டுபிடிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டது ஜூலை 26, 2022 அன்று தங்களின் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டது," என்றும் குறிப்பிட்டுள்ளது.

பயர்பாக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, யூசர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், பாலினம், புவியியல் இருப்பிடங்கள், வருமான நிலைகள், பெயர்கள் போன்ற மிக முக்கிய தரவுகள் இவற்றில் உள்ளன. அதன்படி, கிட்டத்தட்ட 3.4 மில்லியன் பேடிஎம் மால் பயனர்களின் தரவுகள் இந்த தரவுகளில் உள்ளது என்று பயர்பாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Also Read:Necrobotics: ரோபோவாக மாறும் சிலந்தி பற்றி தெரியுமா உங்களுக்கு?

இதில் உள்ள யூசர்கள் தங்கள் தனிப்பட்ட தரவுகள் வெளியாகி உள்ளனவா என்பதைச் சரிபார்க்க Have I Been Pwned என்கிற தளம் மூலம் இந்த வழங்கப்பட்டுள்ளன. மேலும் "இந்த தரவு வெளியிடலில் யூசர்களின் கடவுச்சொற்கள் வெளிப்படவில்லை என்றாலும், யூசர்களின் தனிப்பட்ட தகவலைச் சிறப்பாகப் பாதுகாக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை பேடிஎம் பின்பற்ற வேண்டும்" என்று பயர்பாக்ஸ் மானிடர் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தரவுகளில் உள்ள பயனர்கள் தங்களின் டேட்டா திருடப்பட்டுள்ளதா என்பதை pwned தளத்தின் மூலம் அறிந்து கொண்டு, அதை ஸ்கிரீன்ஷாட்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Data Breach For Months, Online, Online shopping, Paytm, Personal data theft