கூகுளினின் வழிகாட்டு நெறிமுறைகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து பேடிஎம் ஆப் ப்ளே ஸ்டோரில் மீண்டும் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்தனை செயலியான பேடிஎம்-ஐ 50 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பேடிஎம் செயலி சில்லறை கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பேடிஎம் செயலியை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. சூதாட்டங்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பிற சூதாட்ட பயன்பாடுகளுக்கு ப்ளே ஸ்டோர் தடை செய்துள்ளது.
பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியது. மேலும் எந்தவொரு செயலியும் தங்களது பயனாளர்களை இதர இணையதளங்களில் பந்தயங்களில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால் அது கூகுளின் விதிமுறையை மீறிய செயல் என்று விளக்கமளித்தது.
கூகுளின் விதிமீறும் செயல்களில் மீண்டும், மீண்டும் ஈடுபடுவதாக புகார் வந்ததையடுத்து ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் நீக்கப்பட்டது. கூகுளின் இந்த நடடிவக்கையை அடுத்து தனது செயலியில் இருந்து விதிமீறல்களை பேடிஎம் நிறுவனம் சரிசெய்தது.
பேடிஎம் வழிகாட்டு நெறிமுறைகளை சரிசெய்த சில மணி நேரங்களில் கூகுளின் ப்ளே ஸ்டோரில் மீண்டும் இடம்பெற்றது. இதனை பேடிஎம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அதில், அப்டேட் செய்யப்பட்டது. நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என்று பதிவிட்டுள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் நீக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.