மக்களிடையே பிரபலமாக உள்ள டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்ஃபார்மான பேடிஎம், மின் கட்டணத்தை பேடிஎம் ஆப் மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தாங்கள் அறிவித்துள்ள சலுகையை கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் உள்ள யூஸர்கள் பெறலாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதன்படி கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பேடிஎம் யூஸர்கள், தங்களது முதல் எலெக்ட்ரிக் பில் பேமெண்ட்டிற்கு (first payment) ரூ.50 வரை உத்தரவாதமான கேஷ்பேக் (guaranteed cashback) பெறுவார்கள் என்றும் பேடிஎம் நிறுவனம் கூறி உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே பேடிஎம் ஆப்-ஐ பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்தி வரும் யூஸர்கள், தங்களது ஒவ்வொரு பில் பேமெண்ட்டிலும் 10,000 வரை கேஷ்பேக் பாயிண்ட்ஸ்களை பெறலாம் என்றும், இந்த கேஷ்பேக் பாயிண்ட்ஸ்கள் அற்புதமான டீல்கள் மற்றும் டாப் பிராண்டுகளிலிருந்து வரும் கிஃப்ட் வவுச்சர்களுக்கு ரிடீம் செய்யப்படலாம். மேற்கண்ட மாநிலங்களின் முக்கிய மின் விநியோக நிறுவனங்களின் எலெக்ட்ரிக் பில் பேமெண்ட்ஸ்களுக்கு கேஷ்பேக் டீல் பொருந்தும் என்று தெரிவித்துள்ள பேடிஎம் நிறுவனம், நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி, கேரளா ஸ்டேட் எலெக்ட்ரிசிட்டி போர்ட் லிமிடெட், உத்தர்பிரதேஷ் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், டாடா பவர் மும்பை, அதானி எலெக்ட்ரிசிட்டி, பெஸ்ட், மஹாராஷ்ட்ரா ஸ்டேட் எலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட், பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (PSPCL), ஆந்திரபிரதேஷ் சவுதர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட், ஈஸ்ட்டர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி ஆஃப் ஆந்திரப்பிரதேஷ் (APEPDCL) மற்றும் ஆந்திரப்பிரதேஷ் சென்ட்ரல் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் (APCPDCL).
Paytm App மூலம் யூஸர்கள் ஒரு நிமிடத்திற்குள் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்தலாம் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. மேற்கண்ட மாநிங்களை சேர்ந்த யூஸர்கள் தங்கள் மாநிலம் மற்றும் சர்வீஸ் ப்ரொவைடரை செலக்ட் செய்து, தங்களது பில் எண் அல்லது கஸ்டமர் அக்கவுண்ட் நம்பரை என்டர் செய்து, பின்னர் தங்கள் எலெக்ட்ரிசிட்டி பில்லுக்கான பணத்தை செலுத்த வேண்டும். யூஸர்கள் தங்களது Paytm யூபிஐ, Paytm வாலட், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம்.
பேமெண்ட் செலுத்தப்பட்ட உடன் யூஸர்கள் உடனடியாக அதற்கான ரசீதை பெறுவார்கள். தவிர SMS மற்றும் in-app notifications மூலம் பணம் செலுத்த வேண்டிய தேதி குறித்தும்
Paytm ஆப் யூஸர்களுக்கு நினைவூட்டுகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களிடையே பிரபலமாக உள்ள ஃபோன்பே-விற்கு போட்டி போடும் வகையில், தொற்று நோய்க்கு மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ்களை அதிகரிக்க சுமார் 70-க்கும் மேற்பட்ட மின்சார வாரியங்களுடன் தனது பார்ட்னர்ஷிப்பை பேடிஎம் விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
Also read... கூகுளில் இருக்கும் ஈஸியான 3 செட்டிங்ஸ் - தெரியாமல் இருந்தால் தெரிஞ்சுக்கோங்க!
மேலும் இது பற்றி தகவல் தெரிவித்துள்ள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், " ஒவ்வொரு வீட்டின் மின்சார கட்டணமும் ஒரு கணிசமான மற்றும் முக்கிய மாதாந்திர செலவு பட்டியலில் இருக்கிறது. எனவே உறுதியான கேஷ்பேக்குடன் மின் கட்டணங்களை செலுத்த பேடிஎம் ஆப்-ஐ பயன்படுத்துவதற்கு சிறிய நகரங்கள் மற்றும் டவுன்களில் இருக்கும் யூஸர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.