ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Password, Bigbasket - இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் பட்டியல்

Password, Bigbasket - இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் பட்டியல்

மாதிரி படம்

மாதிரி படம்

பாஸ்வேர்டு தானே, அதில் என்ன இருக்கிறது என்று லட்சக்கணக்கான இந்தியர்கள் அலட்சியமாக, மிகவும் எளிதாக கண்டுபிடிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இணையதளத்தின் பயன்பாடு தவிர்க்கவே முடியாத நிலையில், எல்லா இடங்களிலும் பாதுகாப்பான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் தளம் வரை பாஸ்வேர்ட் எல்லா இடங்களிலும் தேவை. ஒரு சில இடங்களில் டூ-ஃபேக்டர் ஆத்தண்ட்டிகேஷன் இருப்பினும் அடிப்படையாக பாஸ்வேர்டுகளையும் அமைக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது password என்ற சொல் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டாக இருக்கிறது என்பதை நார்ட் செக்யூரிட்டி ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

  பாஸ்வேர்டு தானே, அதில் என்ன இருக்கிறது என்று லட்சக்கணக்கான இந்தியர்கள் அலட்சியமாக, மிகவும் எளிதாக கண்டுபிடிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் இவை தான் என்று ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் நான்காவது இடத்தில் இருக்கும் பாஸ்வேர்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. நார்ட் செக்யூரிட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘bigbasket’ என்ற பாஸ்வேர்டு 4 வது இடத்தில் உள்ளது.

  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகமாகும் வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ்!

  2022 ஆம் ஆண்டு அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் பட்டியலில், முதல் நான்கு இடத்தை பிடித்திருக்கும் பாஸ்வேர்டுகள் இங்கே.

  • Password – 39 லட்சம்
  • 123456 – 1.6 லட்சம்
  • 12345678 – 1 லட்சத்துக்கும் மேல்
  • Bigbasket – 75ஆயிரம்
  • Nord செக்யூரிட்டியின் படி, முதல் மூன்று பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்து ஹேக் செய்ய ஒரு நொடி தான் தேவை.

   பாஸ்வேர்டு அமைக்கும் பொழுது அதில் எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் ஆகியவற்றின் கலவையாக அமைக்க வேண்டும் என்று ஒவ்வொரு தளமுமே குறிப்பிடும். ஒரு சில தளத்தில் அவ்வாறு காம்பினேஷன் இருந்தால் மட்டும் தான் பாஸ்வேர்டை ஏற்றுக்கொள்ளும். ஆனால், சில தளங்களில் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் நீங்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியும்.

   பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை அமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு அல்லது அலட்சியமாக, password என்ற வார்த்தையையே கடவுச்சொல்லாக பயன்படுத்தும் மனப்போக்கு உள்ளதை இந்த அறிக்கை காட்டுகிறது. அதே போலத்தான், எண்களை பாஸ்வேர்டாக அதிக நபர்கள் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், நான்காவது பாஸ்வேர்டான bigbasket என்ற வார்த்தை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

   விட்டு கொடுக்காத எலான் மஸ்க்..! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ப்ளூ டிக் முறை.!

   மக்களிடையே பரவலாக பழக்கத்தில் உள்ள பிராண்டு அல்லது நிறுவனத்தின் பெயர்களை, டிரெண்டில் உள்ளவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் பழக்கம் காணப்படுகிறது.

   இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும், password என்ற வார்த்தை தான் 49 லட்சம் முறை கடவுச்சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று ஸ்மார்ட்டாக சிந்திப்பதாக லட்சகணக்கானவர்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

   ஆன்லைனில் பாதுகாப்பு அம்சம் எவ்வளவு பலப்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியர்கள், எளிதில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்டுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். Bigbasket, Googledummy, pass@123, 123456789, abcd1234, உள்ளிட்டவற்றை ஆகியவை மிக மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும். இந்த பாஸ்வேர்டுகளை ஹேக் செய்ய 5 முதல் – 15 நிமிடங்கள் போதும் என்று நார்ட் பாஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending