உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட இணைய தேடுபொறி கூகுள் குரோம். காலத்திற்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்ப அப்டேட்களை அறிமுகப்படுத்தி தனது பயனர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். இணையம் அறிமுகம் ஆனபோது, முக்கிய தேடு பொறியாக இருந்த யாகூ, போதிய பாதுகாப்பான அப்டேட்களை வழங்காததால் வழக்கொழிந்து போனது. ஆனால் கூகுள் நிறுவனம் அப்படியில்லை. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த அம்சங்களை அறிமுகம் செய்வதில் கூகுள் எப்போதுமே முன்னோடி தான்.
அந்த வரிசையில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்கிறது கூகுள். அது தான் பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக பாஸ் கீ. பாஸ்வேர்ட்களை ஒழித்துக்கட்டும் அளவிற்கு கூகுளில் என்ன நடக்கிறது?.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - பாஸ்கீஸ் (Passkeys) என்பது பாஸ்வேர்ட்களுக்கான (Passwords) ஒரு பாதுகாப்பான மாற்று ஆகும். பாஸ்வேர்ட்கள் எப்போதுமே ஆபத்தானவைகள் தான். ஏனென்றால் பாஸ்வேர்ட்கள் எளிதில் திருடப்படலாம், ஹேக் செய்யப்படலாம் அல்லது ஃபிஷ் (Phish) செய்யப்படலாம்.
அது மட்டுமில்லாமல் நம்மில் பலரும், மிகவும் எளிமையான மற்றும் யாராலும் யூகிக்க முடிகிற பாஸ்வேர்ட்களையே பயன்படுத்தி வருகிறோம். எனவே தான், மக்கள் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீக்களை பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் முடிவு செய்துள்ளது.
பாஸ்வேர்டுகளை விட பாஸ் கீகள் பாதுகாப்பானவைகள். ஏனென்றால் பாஸ்கீகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. மேலும், பாஸ்கீகள் லீக் ஆகாது. ஃபிஷிங் தாக்குதல்களில் இருந்து காப்பது மட்டுமன்றி, பாஸ் கீகளை வெவ்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் (Operating Systems) மற்றும் ப்ரவுசர்களில் (browser) பயன்படுத்த முடியும். அதோடு, வெப்சைட்டுகள் மற்றும் ஆப்கள் என இரண்டிலுமே பாஸ் கீகளை பயன்படுத்தலாம்.
Read More : இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனிமே ஈசியா டவுன்லோடு செய்யலாம்..!
கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாஸ்கீ-களை பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களது குரோம்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். இந்த பாஸ் கீ முறை தற்போது Windows 11, macOS மற்றும் Android-ல் பயன்படுத்தலாம்.பாஸ்கீஸ் என்பது இது பாஸ்வேர்ட்களை மாற்றுவதற்கான ஒரு ஆரம்ப கட்டமே ஆகும். பாஸ் கீகளை நாம் பயன்படுத்த தொடங்கும் போது, பாஸ்வேர்டுகளையும் பயன்பாட்டில் வைத்திருக்கலாம்.
படிப்படியாக புதிய முறைக்கு மாறிக் கொள்ளலாம். அதாவது கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) வழக்கம் போல செயல்படும். எல்லா டெவலப்பர்களும் தங்கள் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களில் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீகளை ஏற்க சிறிது காலம் ஆகும் அதுவரையில் பாஸ்வேர்ட்கள் பயன்பாட்டை தொடரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Chrome, Technology