பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

கோப்புப்படம்

மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி, இந்திய விமானப்படையில் உள்ள 10 சதவீத இராணுவ வான்வெளி பாதையை பயணிகள், வணிக விமானங்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இதன் விளைவாக விமான நேரம் குறைக்கப்படுவதோடு, எரிபொருளில் சேமிப்பு உட்பட ஒரு விமானத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவும் குறைகிறது. இது ஆரம்பத்தில், லக்னோ-ஜெய்ப்பூர் மற்றும் மும்பை-ஸ்ரீநகர் உள்ளிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் சிறந்த வான்வெளி பயன்பாட்டுக்காக செயல்படுத்த உள்ளது. மேலும் இதன் மூலம் ஒரு விமானத்திற்கு ரூ.40,000 வரை மிச்சப்படுத்தும் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணிகள் விமானங்களின் பறக்கும் நேரத்தைக் குறைக்க இந்திய வான்வெளியை திறம்பட பயன்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது விமான கேரியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் என்றும் கூறினார். தற்போது இந்திய வான்வெளியில் பயணிகள் விமானங்களுக்கு 60 சதவீதம் மட்டுமே இலவசமாக கிடைக்கிறது. மீதமுள்ளவை இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகையால், மற்ற வான்வெளியைப் பயன்படுத்துவது எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் பறக்கும் செலவையும் ரூ. 1,000 கோடி வரை குறைக்கும். கொரோனா வைரஸ் காரணமாக விமானங்களுக்கு ஏற்படும் இழப்புகளில் ஈடுகட்ட முயற்சிக்கும். அதே வேளையில், அது பயனர்களின் டிக்கெட் விலையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிற மூத்த அதிகாரிகள் இடையே இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் திறமையாக்குவதற்கு உதவக்கூடிய உத்திகள் குறித்து விரிவான ஆய்வுக்காக ஒரு சந்திப்பை மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் இந்திய விமான விண்வெளி திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பயணிகளுக்கு பறக்கும் நேரத்தை குறைப்பதோடு, விமானங்களின் ஒத்துழைப்புடன் செலவுகளை மிச்சப்படுத்த விமான நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Also read... ’குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’ - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உறுதி..இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவில் பயணிகள் விமானங்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பறக்கும்போது பயண நேரத்தை குறைக்க இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட மண்டலங்களுக்கு மேல் பறக்க முடியும். இது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் நேரம் இரண்டையும் மிச்சப்படுத்தும். இதனால் அதிக செலவும் குறையும். கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து இந்திய விமானத்துறை போராடி வந்தப் பின்னரே இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டெல்லிலிருந்து - மும்பைக்கு சராசரியாக 2 மணி நேரம் ஆகும்.

தற்போதைய புதிய முறைப்படி நேரடி பாதையை தொடர்ந்தால், விமான நேரத்தை குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை குறைத்து மொத்தமாக 2 மணி நேரத்திற்கும் குறைவாக கொண்டு வரலாம். மேலும் இதனால் குறைந்தது 1,000 லிட்டர் எரிபொருளை சேமிக்க முடியும். இது விமான கேரியர்களுக்கு மிகப்பெரிய தொகையை குறைந்த நேரத்தில் ஈட்டித்தரும். இறுதியாக ஒரே நாளில் அதிக விமானங்கள் பறக்க முடியும் என்பதால் லாபத்தையும் அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: