உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா? இல்லையெனில் ரூ.1000 அபராத தொகை செலுத்த நேரிடும். ஆகவே விரைவில் இணைத்திடுங்கள்.
இந்த இரு ஆவணங்களையும் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி முடிவடைவதால் உடனடியாக செய்யுங்கள். உங்கள் பான் கார்டை, ஆதார் அட்டையுடன் காலக்கெடுவிற்குள் இணைக்கத் தவறினால், வருமான வரித்துறை உங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடும். ரூ.1,000 அபராதத்தோடு, உங்கள் பான் கார்டும் செல்லாமல் போகும். 2021-ம் ஆண்டின் நிதி மசோதாவை நிறைவேற்றும் போது, மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்க 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய பிரிவை (பிரிவு 234 ஹெச்) இந்திய அரசு இணைத்தது.
Bank Holidays in April: ஏப்ரல் மாத வங்கி விடுமுறை தினங்கள்!
வருமான வரித் துறையின் மின் தாக்கல் (e-filing) போர்ட்டலுக்குச் செல்லுங்கள்.
இடதுபுறத்தில் உள்ள ஆதார் பிரிவை க்ளிக் செய்யவும்.
அதில் உங்களது பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும்.
CAPTCHA-வை சரியாகக் குறிப்பிடவும்.
'லிங்க் ஆதார்' என்பதை கிளிக் செய்தால், உங்கள் பான் - ஆதார் இணைப்பு முழுமையடையும்.
பின்னர் ஐ-டி துறை உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்க்கும், அதன் பிறகு இணைப்பு செய்யப்படும்.
வங்கி கணக்கு ஓபன் செய்ய, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குகளை வாங்க மற்றும் 50,000-க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்ய போன்ற பல விஷயங்களுக்கு பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Pan card