ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அண்டார்டிக்காவில் சுருங்கி வரும் ஓசோன் ஓட்டை..! விஞ்ஞானிகள் கணிப்பு

அண்டார்டிக்காவில் சுருங்கி வரும் ஓசோன் ஓட்டை..! விஞ்ஞானிகள் கணிப்பு

ஓசோன்

ஓசோன்

தென் துருவத்தின் தற்போதைய மதிப்பீட்டுப்படி , 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் ஓசோன் துளைகளை விட 2022 துளை கணிசமாக குறைந்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

அண்டார்டிக் பகுதியின் மேல் உள்ள ஓசோன் ஓட்டை செப்டம்பர் 7 மற்றும் அக்டோபர் 13, 2022 க்கு இடையில் செய்த ஆய்வில் சராசரியாக 23.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவாக சுருங்கியுள்ளது.

ஓசோன் துளை என்பது அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள அடுக்கு வளி மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் மெலிவு ஆகும். கதிர்வீச்சுகளை வளிமண்டலத்தில் தடுத்து நிறுத்தும் முக்கியமான பொறுப்பு  ஓசோனுக்கு உண்டு.

ஓசோன் துளையானது தென் துருவ நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகிறது, ஓசோன்சோன்ட்ஸ் எனப்படும் ஓசோன் அளவிடும் கருவிகளைக் கொண்ட வானிலை பலூன்கள் அடுக்கு மண்டலத்தில் உயரும் போது மாறுபடும் ஓசோன் செறிவுகளை அளவிடுகிறது.

இத கேட்டீங்களா..! தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கிய சோனி இயர்போன்கள்

ஒவ்வொரு செப்டம்பர் மாதமும், மனிதனால் உற்பத்தி செய்யப்படும் சேர்மங்களிலிருந்து பெறப்பட்ட குளோரின் மற்றும் புரோமின் ஆகியவற்றின் வேதியியல் செயலில் உள்ள வடிவங்கள் அதிக உயரத்தில் உள்ள துருவ மேகங்களில் எதிர்வினைகளின் போது இந்த ஓசோன் அளவின் மாற்றங்கள் கண்டறியப்படுகிறது.

தென் துருவத்தின் தற்போதைய மதிப்பீட்டுப்படி , 1990 களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் இருந்த ஓசோன் துளைகளை விட 2022-ல் துளை கணிசமாக குறைந்துள்ளது. குளோரோ புளோரோ கார்பன்கள் அல்லது CFCகள் எனப்படும் தீங்கு விளைவிக்கும்  இரசாயனங்களை வெளியிடுவதைத் தடைசெய்த 'மாண்ட்ரீல் நெறிமுறை' காரணமாக  ஓசோன் துளை மீண்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டின் மதிப்பீடுகள் ஓசோன் துளை 24.8 மில்லியன் சதுர கிலோமீட்டராக இருந்ததைக் காட்டியது. ஜனவரி 2022 , ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா'பாய் எரிமலையின் வெடிப்பிலிருந்து வெளியான வாயுக்கள் அடுக்கு மண்டல தாக்கங்கள் குறித்து விஞ்ஞானிகள் கவலை கொண்டிருந்தாலும், ஹங்கா டோங்காவிலிருந்து எந்த நேரடி தாக்கங்களும் அண்டார்டிக் அடுக்கு மண்டல தரவுகளில் கண்டறியப்படவில்லை.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ’ககன்யான்’ திட்டம் - நெல்லையில் நடந்த சோதனை வெற்றி!

Nasa மற்றும் Noaa இன் ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய போக்கை ஆய்வு செய்ய Aura, Suomi NPP மற்றும் NOAA-20 செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தினர். மேலும் அக். 5, 2022 அன்று, அந்த செயற்கைக்கோள்கள் 26.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அதிகபட்சமாக ஓசோன் துளையை அவதானித்ததைக் கண்டறிந்தனர். சராசரியை விட இது கொஞ்சம் அதிகமாகும். ஆனால் மற்ற தினங்களைப் பார்க்கும் போது ஓசோன் படலம் பெரிதும் மேம்பட்டு வருகிறது.

விஞ்ஞானிகள் டாப்சன் ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோமீட்டர் எனும் ஒளியியல் கருவி கொண்டு அளவீடுகளைச் செய்துள்ளார். இது மேற்பரப்பு மற்றும் விண்வெளியின் விளிம்பிற்கு இடையே உள்ள ஓசோனின் மொத்த அளவைப் பதிவு செய்கிறது. இது மொத்த நெடுவரிசை ஓசோன் மதிப்பு என அழைக்கப்படுகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Antarctica, Climate change, Ozone