• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 2 மில்லியன் இந்தியர்களின் அக்கவுண்ட்டை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?

2 மில்லியன் இந்தியர்களின் அக்கவுண்ட்டை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

பல்வேறு தொழிற்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் பாதுகாப்பான தளத்தை வாட்ஸ்அப்-பில் வழங்க உழைத்து வருகின்றனர்" என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • Share this:
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளும் பெருகி வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான செய்திகளை பலர் பரப்பி வருகின்றனர். பிறர் பகிரும் செய்திகளை உண்மை என நம்பி அதை பல லட்சம் பேர் அப்படியே ஷேர் செய்து வருகின்றனர். இது போன்ற போலியான, வதந்திகளை பரப்ப ஏராளமான போலி அக்கவுண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது எல்லா வகையான சமூக ஊடகங்களிலும் இருந்து வருகிறது.

இருப்பினும் உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப்பில், இந்த போலி அக்கவுண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை போலி அக்கவுண்ட்களை கொண்டு மக்கள் மத்தியில் தவறான செய்திகள், வதந்ததிகள், மோசமான வீடியோக்கள், புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட அக்கவுண்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது முடக்குகிறது.

இந்த செப்டம்பரில் சுமார் 2.2 மில்லியன் வாட்ஸ்அப் யூசர்களின் அக்கவுண்ட்களை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. இந்த அக்கவுண்ட்கள் வாட்சப் நிறுவனத்தின் விதிகளை மீறியதால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வாட்ஸ்அப் யூசர்கள் சமர்ப்பித்த பாதுகாப்பு பற்றிய அறிக்கையின் மூலம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "செயற்கை நுண்ணறிவு மூலம் வாட்சப் தனது யூசர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது.

இதிலுள்ள எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் மெசேஜிங் முறை பாதுகாப்பான வகையில் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. பல்வேறு தொழிற்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் பாதுகாப்பான தளத்தை வாட்ஸ்அப்-பில் வழங்க உழைத்து வருகின்றனர்" என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்டை சில பிரிவுகளின் கீழ் கிடைத்த அறிக்கையின் மூலம் முடக்கம் செய்துள்ளனர்.

அக்கவுண்ட் சப்போர்ட் பிரிவில் 121 அறிக்கைகளும், தடை செய்யும் பிரிவில் 309 அறிக்கைகளும், இதர சப்போர்ட் மற்றும் புராடக்ட் சப்போர்ட் என்கின்ற பிரிகளில் தலா 49 அறிக்கைகளும், பாதுகாப்பு பிரிவில் 32 அறிக்கைகளும் வந்துள்ளன. இந்த அறிக்கைகளில் வந்துள்ள எண்கள் '91' என தொடங்கும் இந்திய எண்கள் ஆகும். இந்த அறிக்கையில் இடம்பெற்ற சுமார் 2,209,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Also read... ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

யூசர்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று ஆகஸ்ட் மாதமும் சுமார் 2 மில்லியன் இந்தியர்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் முடக்கம் செய்யப்பட்டது. யூசர்கள் அனுப்பிய அறிக்கைகளின் மூலமே இந்த அக்கவுண்ட்களும் முடக்கம் ஆனது.

இந்தியாவில் இந்த மே மாதத்தில் நடைமுறை ஆக்கப்பட்ட புதிய தொழிற்நுட்ப விதிகளின் படி இந்த பாதுகாப்பு அறிக்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் உருவாகியுள்ளது. இதே போன்ற பாதுகாப்பு அறிக்கைகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, சமூக ஊடங்கங்களை சரியான பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தி நலம் பெறுவோம். அத்துடன் பாதுகாப்பான முறையில் நமது அக்கவுண்ட்களை பயன்படுத்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: