Home /News /technology /

ஒரே மாதத்தில் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம் - ஏன் தெரியுமா?

ஒரே மாதத்தில் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம் - ஏன் தெரியுமா?

19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

தகவல் தொழில்நுட்பம் 2021 சட்டப்படி முறைகேடாக செயல்படும் வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவை முடக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகள் 2021 புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 16.6 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் முடக்கியுள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் 18.5 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மாதாமாதம் இந்த ஒழுங்கு நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெறுகிறது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த சில ஆண்டுகளாகவே வாட்ஸ்ஆப் தளத்தை பாதுகாப்பு கொண்டதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு, கலை தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறை நிபுணர்களிடம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

    இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் பின்னூட்டங்கள், புகார்களை நிறுவனம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இந்த கணக்குகள் முடக்கப்பட்டன. வாட்ஸ்ஆப்பை தவறான செயல்களை மேற்கொள்ள கருவியாக பயன்படுத்துவதை தடுக்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: வீட்டிற்கு வந்த திருடனுக்கு 35 தையல்கள் - அதிர்ச்சி வைத்தியம் அளித்து பாராட்டுக்களை அள்ளிய வளர்ப்பு நாய்

    தகவல் தொழில்நுட்பம் 2021 சட்டப்படி, மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்த கணக்குகள் முடக்கப்படும். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் எந்த பயனாளரும், கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்பதை நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ban, WhatsApp

    அடுத்த செய்தி